Monday, 23 July 2018

காதலர்கள் ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பையன்: உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன்.

பொன்னு: நீயே போட்டுவிடு

பையன்: இப்படி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலன் : உனக்காக நான் பெத்தவங்களை விட்டுடு வந்துள்ளேன்.

காதலி : போடா .. உனக்காக நான் பெத்ததுகளையே விட்டுடு வந்துருக்கேன் .

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலன் : நேற்று உன் வீட்டுக்கு போயிருந்தேன்.. நம்ம திருமணம் நடக்காதுன்னு நினைக்கிறேன் .

காதலி : ஏன்? எங்க அப்பாவை பாத்தியா?

காதலன் : இல்லை, உன் தங்கச்சிய பார்த்தேன் .

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

girl : நீங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்த விஷயம் வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு..

boy : ஐயையோ உன் தங்கச்சிக்குமா??

girl : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

girl : ஏன்டா, நான்தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என் பின்னாலையே சுத்துறே..

boy : இல்ல.. இந்த மூஞ்சியை வேற எவன் பார்க்கப்போரான்னு பார்க்கத்தான்.

girl : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வடிவேலு : ஏண்டி.. நாம எவ்வளவு நாளைக்கு இப்படியே லவ் பண்ணிட்டு இருக்கறது??

தேவி : எனக்கு ஒரு நல்ல புருஷனும், உனக்கு ஒரு நல்ல பொண்டாட்டியும் வர்ற வரைக்கும்!

வடிவேலு : என்னாது ?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் உங்க வீட்ல எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

காதலி : பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்...... அதான்.......

காதலன் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலன் : உங்கப்பா கிட்ட நேத்து தைரியமா போய் நான் உங்க பொண்ணை லவ் பண்றேன்னு சொ‌ல்‌லி‌ட்டே‌ன்.

காதலி : ரொ‌ம்ப கோபப்பட்டாரா?

காதலன் : இல்ல எ‌ன்ன ரொ‌ம்ப ப‌ரிதாபமா பா‌த்தாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலி : சே! என்ன லவர் நீங்க? 20 லெட்டர் போட்டேன். ஒரு லெட்டருக்குக்கூட பதில் போடாம இருக்கீங்க!

காதலன் : எனக்கு எழுதப்படிக்கத் தெரியாதுன்னு உனக்கு தெரியாதா டியர்?

காதலி : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலி: நீ என்னைவிட 1 வருட‌ம் க‌ழி‌த்து‌த்தா‌ன் ‌பிற‌ந்‌திரு‌க்‌கிறா‌ய்...

காதலன்: அதனால என்ன? நான் உன்னை ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலன்: கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே!

காதலி: மூளையில்லாதவன்கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலி: நாம ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப்போற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச போச்சு

காதலன்: ஐயையோ என்ன சொன்னாரு?

காதலி: போறப்ப எங்க அம்மாவையும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

No comments:

Post a Comment