😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா: என் புருசன் கூட சண்டை போட பயமா இருக்கு.
விமலா: அடிச்சுப் போடுவாரா?
அமலா: இல்ல சமையல்ல உப்ப அதிகமாப் போட்டு பழிவாங்குவாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பெண் 1 : தட்டு போட்டு உட்கார்ந்த உடனே என் கணவருக்குச் சாப்பாடு போட்டுடணும் இல்லைன்னா ரொம்பக் கோபம் வரும்.
பெண் 2 : ஏன் ?
பெண் 1 : கஷ்டப்பட்டு சமைச்சு வெச்சிற அவருக்கு இதுகூடப் பண்ணலைன்னா பின்ன கோபம் வராதா ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விமலா : என் மாமியாரும், நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு
அமலா : ஏன்?
விமலா : வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னு தான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகுப்படுத்த ஒரு ஐடியா சொல்லு.
விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விமலா : என் மாமியார் பொறாமைப்படுறாங்க
அமலா : எதுக்கு ?
விமலா : என் புருசன் கூட மட்டுமே நான் சண்டை போடுறேனாம் அதுக்குத்தான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா : என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.
விமலா : எப்படி சொல்ற?
அமலா : உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கமலா : என்ன என் காதலர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்.
விமலா : என்ன சொல்லி ஏமாத்தினார்?
கமலா : சமைக்கத் தெரியும்-னு தான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா : சினிமாவுக்குப் பாட்டேழுதுகிறவரக் காதலிச்சது தப்பாப் போச்சு
விமலா : ஏன்?
அமலா : காதல் பேயே, பிசாசேன்னு வர்ணிக்கிறாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப் போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
விமலா : தெரியாதே!
அமலா : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா : என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமான நாள்-ல இருந்து தினமும் என்கூட சண்டை போடுறா.....
விமலா : ஏன் மாப்பிள்ளை பிடிக்கலைன்னா....?
அமலா : அப்படியெல்லாம் இல்ல. மாமியார் கூட சண்டை போடுறதுக்காகப் பயிற்சி எடுக்குறா.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விமலா : என் மாமியார் கூட இன்னிக்கு பெரிய சண்டை
அமலா : எதுக்கு?
விமலா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்-னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா : நேத்து என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.
விமலா : எத வச்சு சொல்ற?
அமலா : பீரோ சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா : உங்க வீட்டு டி.வி-ல ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வி-ல படம் ஏன் சின்னதா தெரியுது ?
விமலா : அது செய்திச்சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கவிதா: எங்கப்பா யார் எது சொன்னாலும் நம்பிடுவார்.
சவிதா: சரி.. சுவர்ல ஜிமிக்கிய எதுக்கு மாட்டி வெச்சிருக்காரு.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
கவிதா: சுவருக்கும் காது உண்டு-னு யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க அதான்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தோழி 1 : அவ்வளவு பெரிய கட்டுப்போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?
தோழி 2 : நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு சொன்ன.
தோழி 1 : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கீதா : ஏண்டி மாலா நீ ஏன் துவைக்கிற? வாஷிங் மெஷின் எங்க?
மாலா : அது ஆபீஸ் போயிருக்குடி !
கீதா : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாலா : அவரு போலி டாக்டர்னு எப்படி அவ்வளவு தீர்மானமா சொல்ற?
மாலதி : பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், இதோட சேத்து மேக்-அப் டெஸ்ட், ஸ்க்ரீன் டெஸ்ட் இதெல்லாமும் எடுத்துட்டு வாங்கன்னாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
புனிதா: பால்காரரை காதலிக்கிறதா சொன்னே .. ஆனா அவர் லாண்டரிகாரராச்சே
கவிதா: ஆமாண்டீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனச்சுட்டேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மதி: அந்த ஆள் பயங்கர குடிக்காரர்.
ரதி: நிஜமாவா .. ?
மதி: ஆமாம், வெளியூருக்கு எங்கயாவது போனாகூட சரக்கு ரயில்லதான் போவாருன்னா பாருங்களேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கீதா: நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.
சீத்தா: ஓவியக் கலைன்னா படம் வரையறது.
கீதா: அப்ப தவக்களைன்னா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விஜயா: ஏன் திடீர்னு உன் மாமனாருக்கு 2வது கல்யாணம்னு சொல்ற?
சந்தியா: இவ்வளவு வருஷமா ஒரே மாமியாரோட சண்டை போட்டு ரொம்ப அலுப்பா இருக்கு!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
இந்து: என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.
சிந்து: அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?
இந்து: தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கோமதி: பிச்சைக்காரனுக்கு 25 ரூபாய் கொடுத்தேன்னு பெருமை அடிச்சுக்கறாளே, அவ புருஷன் ஒண்ணுமே சொல்லமாட்டானா?
சுமதி: அவ பிச்சைக்காரன்னு சொல்றதே அவளோட புருஷன தான்!
கோமதி: ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
லதா: என் மாமியார் சாவுக்கு நானே எல்லா காரியமும் பண்ண வேண்டியதாப் போச்சு!
மாலா: பாவம் எப்படி செத்தாங்க?
லதா: அதான் சொன்னேனே . . . நானே எல்லாம் செய்ய வேண்டியதாப் போச்சுன்னு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
திவ்யா: வர்றயா கடைவீதிக்கு போயிட்டு வரலாம்.
பிரியா: நான் மாமியாரை விட்டுட்டு வரமுடியாது.
திவ்யா: ஏன் அவங்க உடம்பு முடியாதவங்களா?
பிரியா: சீ! சீ! நான் சொல்றது மதியானம் 12.00 மணிக்கு டி.வி.ல வர்ற மெகாசீரியல் மாமியார் . . .
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வழக்கறிஞர்: உன்னை கெட்டக்கெட்ட வார்த்தையில அசிங்கமா பேசினான்னு சொன்னியே, என்ன வார்த்தைன்னு நீதிமன்றத்துல சொல்லுங்க!
பெண்: மரியாதை உள்ள யாரும் அதை காது கொடுத்து கேக்க முடியாது சார்!
வழக்கறிஞர்: அப்ப நீதிபதி அய்யாகிட்ட மட்டும் அதை ரகசியமா சொல்லு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மனைவி: என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்.
சினேகிதி: அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்.
மனைவி: கோடீஸ்வரராக இருந்தார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சிந்து: மாப்பிள்ளை மருத்துவத் துறையில் பத்து வருஷமா இருக்கறதா சொல்லி என்னை ஏமாத்திட்டாரு.
இந்து: எப்படி சொல்ற?
சிந்து: அவரு பத்து வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மௌசிகா: உங்க அம்மாவ ஏன் மிஸ்ஸியம்மான்னு கூப்படற?
மௌனிகா: அவங்க அடிக்கடி எதையாவது தொலைச்சுக்கிட்டே இருப்பாங்க
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஜானகி: என் மருமகளுக்கு ரொம்பதான் கொழுப்பு..
மோகினி: ஏன் என்ன செஞ்சா?
ஜானகி: நான் பாலை வெச்சுப் பால் கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வெச்சு ரசுகுல்லா பண்ணுங்கிறா......
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கலா: அடுத்து நான் என்ன பாடணும்னு நீங்க ஆசைப்படறீங்க? கல்யாணியா? சிந்து பைரவியா? நீலாம்பரியா? காம்போதியா?
மாலா: மங்களம்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாணி: உங்க புடவை வெள்ளை வேளேர்ன்னு பள பளக்க என்ன உபயோகிறீங்க ..
ராணி: என்னோட கணவரை தான்..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
காவ்யா: அந்த ஆள் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க.. .?
ஒவியா: என்னோட ப்ளட்ல யூரியா நிறைய இருக்கு.. அதனால தலைமுடி நல்லா வளரும்னு சொல்றாரே..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சீதா: என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
கீதா: எப்படி?
சீதா: என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லையே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ராகினி: எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை நடந்து இன்னியோட வருஷம் ஆறு ஓடிப்போச்சு
வாகினி: ஆறு வருஷமா உங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் கிடையாதா?
ராகினி: இன்னைக்கு அவுங்களோட 8-வது திவசம் டீ!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மதி: என் வீட்டுக்காரர் எங்கேயும் வேலைக்குப் போகலைனாக்கூட அவருக்கு பந்தாவுல ஒண்ணும் குறையில்லை..
ரதி: ஏன் ?
மதி: நான் சம்பளம் வாங்கிக் கொடுத்த உடனே போய் மல்லிகைப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்துடுறாரு
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மதி: கராத்தே மாஸ்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு?
ரதி: என்னாச்சு?
மதி: முதலிரவிலே ஆ- ஊ-ன்னு கத்தி என் மானத்தை வாங்கிட்டாரு
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விஜயா: செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு..
ஓவியா: ஏன்?
விஜயா: இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாலா: வேகப் பந்து வீச்சாளரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா எப்படி?
கலா: ஏன்?
மாலா: பாஸ்ட் நைட் கொண்டாடிட்டார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கமலா: முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே என்ன ஆச்சு?
மாலா: டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா?
மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பவி: சாம்பார கோல்ட் ஆக்கணும்ன என்ன பண்ணனும்?
சவி: 22 கேரட்டே உள்ள போடணும்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விமலா: ரொம்ப நாளா சரியா சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா
அமலா: யாரு?
விமலா: மீனா தான்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
இந்து: என் மகன் ஜெயில்ல இருக்கான்
சிந்து: ஏன்?
இந்து: ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான். அதான்.
சிந்து: என்ன மொழிப் பிரச்சினை?
இந்து: தேன் மொழிய கெடுத்துட்டான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமலா: என் புருசன் சரியான சினிமாப் பைத்தியம்
விமலா: அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தாரணி: அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட செக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு
பூரணி: உடம்பு நல்லா இருந்தா?
தாரணி: பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சங்கி: அரசியல் வாதியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு.
கீதா: ஏன்?
சங்கி: முதலிரவை சீரணி அரங்கத்துல வச்சுக்கலாம்னு சொல்றாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஜானகி: அவர் பயங்கர குடிகாரர்
மோகினி: இருக்கட்டும்
ஜானகி: அதுக்காக கை பம்புல தண்ணி அடிக்கிறப்பகூட ஊறுகாயைத் தொட்டுக்கணுமா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கலா: எங்க வீட்ல மாமியார் - மருமகள் சண்டை கூட டி.வி. சீரியல் மாதிரி ஆயிடுச்சு.
மாலா: எப்படி?
கலா: ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முதல்நாள் சண்டைலேர்ந்து கொஞ்சம் போட்டுக் காட்டுவாங்க!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கண்ணகி: உன் கணவர் வீட்டு வேலைய எல்லாம் முடிச்சுட்டாராம்?
மோகினி: உனக்கு எப்படித் தெரியும்?
கண்ணகி: இதோ பாரு கேபிள் டி.வி-யில் விளம்பரம் கொடுத்திருக்காரே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாலா: ஆனாலும் அந்த டாக்டருக்கு ரொம்பத்தாண்டி நக்கல்.
விமலா: ஏண்டி?
மாலா: பல்லைப் பிடுங்கறப்போ வலிச்சா, பல்லை நல்லா கடிச்சிக்குங்கன்னு சொல்றாரே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விமலா: அவரு சரியான குடிகாரரா இருக்காரு.
மாலா: எப்படிச் சொல்றே?
விமலா: டாக்டர் கொடுத்த டானிக்கைகூட சோடா கலந்துதான் சாப்பிடறாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாலதி: எல்லா மெகா சீரியல்-களிலேயும் பழைய நடிக, நடிகைகளையே போடறாங்களே ஏன்?
சாலினி: அவங்கதான் இப்ப மெகா சைஸ்ல இருக்காங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கமலா: பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா.. அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா?
விமலா: காபி பொடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க?
கமலா: ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
இந்து: என் கணவருக்கும் எங்க வீட்டு வேலைக்காரிக்கும் தொடர்பு இருக்குமோனு சந்தேகமா இருக்கு.
சிந்து: எதை வைச்சு அப்படிச் சொல்றே?
இந்து: நான் என் கணவரைத் திட்டினா மனசு சரியில்லை-ன்னு அன்னிக்கி லீவு எடுத்துக்கிட்டு போயிடுறான்னா பாருங்களேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
விஜி: ராப்பிச்சைக்கார கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா .. ஏன்?
மதி: நைட் ஆனா கெளம்பிடுறாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment