Monday, 23 July 2018

நோயாளி ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர், எனக்கு இனிமே இதயத்தில எந்தப் பிரச்சினையும் இல்லையே?

டாக்டர் : கவலையேபடாதீங்க, இனிமே நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க இதயம் நல்லா வேலை செய்யும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?

நோயாளி 2: டாக்டர் தான் "அரை(றை) மூடி " டானிக் குடிக்க சொன்னார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல.

டாக்டர் : வயிறு வலிக்கும் போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்.

டாக்டர்: அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நர்ஸ் : டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க...

நோயாளி : நான் ஆப்ரேஷன் பேஷண்ட்...!

நர்ஸ் : அப்ப டிக்கெட் வாங்கிட்டு உட்காருங்க!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர்: நான் தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்!

நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC-ஐ காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??

டாக்டர் : ஆமாம் ,

நோயாளி : ஆனா , அந்த Tonic பாட்டில ஒரே ஒரு மூடி தானே இருக்குது ?

டாக்டர் : ?????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: காதுல பஸ் ஓடுர மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்

டாக்டர்: பரிசோதித்து விட்டு அப்படி ஒண்ணும் எனக்கு... கேட்கலையே!

நோயாளி: இப்போ ஏதாவது சிக்னல்-ல நின்னுருக்குமோ?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!

டாக்டர்: தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.

டாக்டர்: எப்போ நடந்தது?

பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.

டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?

பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷன்ட் : நர்ஸ் நீங்க ஏன் இதயத்தையே திருடிடிங்க ..

நர்ஸ் : போடா லூசு... டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என் உடம்புக்கு என்ன பண்ணுதுன்னே சொல்லத் தெரியலை..

டாக்டர்: டோன்ட் ஒர்ரி.. எனக்குக் கூட எப்படி ஆபரேசன் பண்ணப் போறேன்னு சொல்லத் தெரியலை.. நான் பயப்படறேனா..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் மாத்திரை சின்னதா இருக்கு!

டாக்டர்: அதோட விலையை பாருங்க பெருசா இருக்கும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என்னை நாய் கடித்து விட்டது.

டாக்டர்: எந்த இடத்துல?

நோயாளி: பெருமாள் கோவில் சந்துல

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நர்ஸ்: இப்போ வந்த பேஷண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்னு எப்படிச் சொல்றீங்க டாக்டர்?

டாக்டர்: அவருக்கு வந்திருக்கறது வைரஸ் ஃபீவர்-னதும், ஆன்ட்டி வைரஸ் போட்டா சரியாயிடுமான்னு கேட்டாரே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: தற்கொலை செஞ்சுக்க பல தடவை முயற்சி செஞ்சேன் டாக்டர்!

டாக்டர்: பேசாமே என்கிட்டே ஒரு ஆபரேஷன் பண்ணிக்கிட்டா போதுமே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர்: உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

மனைவி: அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்: மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: ரெண்டு நாளைக்கு ஆபரேஷனை தள்ளிப்போட முடியுமா டாக்டர்?

டாக்டர்: ஏன்?

நோயாளி: இந்த இரண்டு நாளுக்குள்ள என்னோட கடைசி ஆசையை நிறைவேத்திக்கறதுக்குத் தான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷண்ட்: ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டானு சொல்றீங்க?

நர்ஸ்: டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!

டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!

நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில் தான் இருக்கிறது.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷண்ட்: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை

டாக்டர்: இந்த டானிக்கை சாப்பிடுங்க.

பேஷண்ட்: சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?

டாக்டர்: நல்லா இருமலாம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர் : நீங்க பிழைக்கிறது கஷ்டம்......

நோயாளி : ஏன் டாக்டர்?

டாக்டர் : ஸ்டெட்டஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் ரொம்ப டென்ஷனா இருக்கு..

டாக்டர் : டென்ஷனக் குறைக்கத்தான் மாத்திரை எழுதிக் கொடுத்தேனே..

நோயாளி : மாத்திரைப் பத்தியெல்லாம் வர்ற செய்தியப் படிச்சா இன்னும் டென்ஷன் அதிகமாகுது டாக்டர்.. வேறு எதாச்சும் செய்யுங்க......

டாக்டர் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் நான் கடவுளா இரு‌க்குறதை உணர்றேன்.

டாக்டர் : ஓ! அப்படியா, கொஞ்சம் ஆரம்பத்திலேருந்து சொல்லுங்க.

நோயாளி : முதல்ல ஆகாயம், பூமி இதையெல்லாம் படைச்சேன்.

டாக்டர் : 😧 😧

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : என்னய்யா, பாம்பு மாத்திரைனு சொல்ற. இ‌வ்ளோ பெ‌ரிசா இரு‌க்கு.

மருத்துவர் : இது அனகோண்டா பாம்பு மாத்திரைங்க..

நோயாளி : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : என்ன டாக்டர் நேத்திக்கு ‌பிர‌ச்‌சினை ஒ‌‌‌ன்று‌ம் இ‌ல்லை. மைனர் ஆபரேஷன் ப‌ண்‌ணிடலா‌ம்னு சொ‌ல்‌லி‌ட்டு, இ‌ன்‌னி‌க்கு மேஜர் ஆபரேஷ‌ன் செ‌ஞ்சாகனு‌‌ம் சொல்றீங்களே?

மருத்துவர் : நான் என்ன பண்ணட்டும்! நா‌‌ன் வா‌ங்க இரு‌ந்த ‌நில‌த்து‌க்கு நேத்தி வரைக்கும் தொகைய குறை‌ச்சலா சொ‌‌ல்‌லி‌க்‌கி‌ட்டிரு‌ந்த தரக‌ர், இன்னிக்கு 5லட்சம் ஆகும்னு சொல்லிட்டாரே!

நோயாளி : 😯 😯

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : எ‌ல்லா‌த்து‌க்கு‌ம் மு‌ன்பண‌ம் கே‌க்கறதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌க்கே‌ன். இவ‌ங்க எ‌ன்னடா‌ன்னா சாவு‌க்கே மு‌ன்பண‌ம் கே‌க்குறா‌ங்களே?

உறவினர் : ‌நீ‌ங்க எ‌ன்ன சொ‌ல்‌றீ‌ங்க பு‌ரியலயே?

நோயாளி : நாளை‌க்கு நட‌க்க‌ப்போற ஆபரேஷனு‌க்கு இ‌ன்னை‌க்கு அ‌ட்வா‌ன்‌ஸ் க‌ட்ட சொ‌ல்றா‌ங்களே அதை‌ சொ‌ன்னே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : வயித்து வலி பொறுக்க முடில டாக்டர்!

டாக்டர் : வயித்த வலிக்கும் போது எதுக்கு பொறுக்க போறீங்க!

நோயாளி : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் வரவர ரொம்ப சந்தேகப்படற குணம் ஒரு வியாதியாவே ஆயிடுச்சு!

டாக்டர் : அப்படி என்னத்த சந்தேகப்படுவீங்க?

நோயாளி : உதாரணத்துக்கு நீங்க எம்.பி.பி.எ‌ஸ் படிக்கலையோ அல்லது படிச்சு ஃபெயில் ஆயிட்டீங்களோ அல்லது நீங்க வெறும் போலி டாக்டரோ இப்படி எல்லாம் சந்தேகம் வருது டாக்டர்.......

டாக்டர் : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு.

மருத்துவர் : நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயா‌ளி : க‌ண் ச‌ரியா தெ‌ரிய மா‌ட்டே‌ங்குது டா‌க்ட‌ர்..

கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க!

நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: வெறு‌ம் கா‌ய்‌ச்சலு‌க்கு‌த்தா‌ன் உ‌ங்க கி‌ட்ட வ‌ந்தே‌ன். ச‌ரியா‌கிடு‌ம்னு நீங்க கொடுத்த மாத்திரையை ரெண்டு நாளாகச் சாப்பிட்டேன். இப்ப ரொ‌ம்ப மோசமா‌கி‌வி‌ட்டது. பேசக்கூட முடியலே!

டாக்டர்: உங்க சாப்பாட்டிலே ஏதாவது கோளாறா இருக்கும்? என்னென்ன சாப்பிட்டிங்க? சொல்லுங்க?

நோயாளி: அ‌ச்ச‌ச்சோ... சா‌ப்‌பாடு‌ம் சா‌ப்‌பிடனுமா? இ‌ந்த மா‌த்‌திரை ம‌ட்டு‌ம் சா‌ப்‌பி‌ட்டா போது‌ம் உட‌ம்பு ச‌ரியா‌கிடு‌ம்னு ‌நீ‌ங்கதானே சொ‌ன்‌னீ‌ங்க

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: நேத்து ராத்திரி எக்கச்சக்கமா தூக்க மாத்திரைய சாப்டுட்டேன் டாக்டர்!

டாக்டர்: அப்புற‌ம் என்ன ஆச்சு?

நோயாளி: என்ன ஆகுமோங்கற பயத்துல தூக்கமே வரல்ல டாக்டர்.

டாக்டர்: ?????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என் காதுல எ‌ப்போது‌ம் ஒரு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு எங்க செவிடாயிடுவோமோன்னு பயமா இருக்கு!

டாக்டர்: நல்லதுதான! செவிடாயிட்டா சத்தம் கேக்காது பாருங்க!.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: என்ன அந்த டாக்டர் கத்தி, அருவாமனைனு எடுத்துக்கிட்டு ஆபரேஷன் தியேட்டர்குள்ள வர்றாரே பாக்கவே பயமா இருக்கு!

நர்ஸ்: பயப்படாதீங்க! ஆபரேஷன் செஞ்சுகிட்டே, மத்தியான சமையலுக்கு தேவையான காய்கறியையும் நறுக்கற பழக்கம் அவருக்கு எப்பவும் உண்டு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தனியார் மருத்துவமனையில் டாக்டரை பார்த்துவிட்டு வந்த நோயாளி மற்றவரிடம் :

நோயாளி: இவரு போலி டாக்டர் மாதிரி தெரியுது...

தாமு: ஏன் அப்படி சொல்றீங்க?

நோயாளி: இல்ல, மருந்தோட பேர சொல்லிட்டு எங்கிட்ட ஸ்பெல்லிங் கேட்டாரு அதான்...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர்! டாக்டர்! என் நாக்கு வெளில தொங்கிகிட்டே இருக்கு..

டாக்டர்: கொஞ்சம் அப்படியே இருங்க என் ஸ்டாம்பையும், கவரையும் கொஞ்சம் ஒட்டிக்கறேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் நீங்க சொன்னீங்கனுட்டு சிகரட்ட நிறுத்தி அதுக்கு பதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னா...

டாக்டர்: ஏன்? நல்ல விஷயம்தான? இதுல என்ன பிரச்சனை இருக்கு?

நோயாளி: எவ்வளவு தீக்குச்சி வேஸ்ட் பண்ணினாலும் சூயிங்கம் பத்தவே மாட்டேங்குதே...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் எப்ப வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் கடுமையா தலை வலிக்குது... ரொம்ப களைப்பா இருக்கு.

டாக்டர்: அது ஒண்ணும் இல்ல... டெய்லி 2-3 பெக் சாப்டுட்டு டின்னர் சாப்டுங்க சரியாப் போயிடும்..

நோயாளி: போன தடவை வந்தப்ப டிரிங்க்ஸ் வேண்டாம் கம்ப்ளீட்டா நிறுத்துங்கன்னு சொன்னீங்களே?

டாக்டர்: அதுக்கப்புறம்தான இந்த நர்சிங் ஹோமையே கட்டினேன்...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒரு நோயாளி தன் மனைவியுடன், ஆஸ்பத்திரியில்: டாக்டர் தெரியாம ஸ்பூனை முழுங்கிட்டேன். கஷ்டமா இருக்கு.. .

மனைவி: ஆமாம் டாக்டர். .. ஸ்பூன் இல்லாம ஊறுகாய் எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. .

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர், நான் நூறு வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு.

டாக்டர்: அப்ப சரி நானா ஜோசியரான்னு ஒரு கை பார்த்துடுவோம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் எல்லா மருந்தும் வாங்கிட்டேன். இதோ மேல ஒண்ணு எழுதியிருக்கீங்க. அது மட்டும் புரியல...

மருத்துவர் : பேனா எழுதாம இரு‌ந்தது, அதா‌ன் அ‌ங்க ‌கி‌ரி‌க்‌கி பா‌‌த்தே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் காது கேட்கலைன்னா இந்த மருந்து போடலாமா பாருங்க?

மருத்துவர் : காதுதா‌ன் கேட்கலை‌ல்ல.. அ‌ப்புற‌ம் ஏ‌ன் நீங்களா போடுறீங்க, அதுவா கேட்டா பார்த்துக்கலாம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் என்னோட இ.சி.ஜிய வச்சுகிட்டு என்ன பண்றீங்க?

மருத்துவர் : சரியான நேரத்துல சொன்னீங்க, இது என்னடான்னு குழம்பிப் போயிட்டேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: இதுவரைக்கும் ஏகப்பட்ட கண்ணாடியப் போட்டும் கண்ணு சரியா தெரியமாட்டேங்குதே சார்!

டாக்டர்: எ‌ப்படி போ‌ட்டீ‌ங்க?

நோயாளி: கை‌யில எடு‌த்து தரை‌யில போ‌ட்டே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் டாக்டர் கை பயங்கரமா நடுங்குது டாக்டர்

டாக்டர்: நீங்க அதிகம் குடிப்பீங்களா?

நோயாளி: எங்க டாக்டர் அதான் கை நடு‌ங்‌‌‌கி‌க்‌கி‌ட்டே இரு‌க்கே. நிறைய கீழவே சிந்திடுது டாக்டர்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என‌க்கு ஆபரேஷ‌ன் செ‌ய்ற நீங்க தான் என‌க்கு தெய்வம்!

டாக்டர்: ஆபரேஷன் செ‌ய்ற வரை‌க்கு‌ம் தா‌ன் நா‌‌ன் தெ‌ய்வ‌ம். அது‌க்கு‌ப் ‌பிறகு ‌நீ‌ங்கதா‌ன்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டா‌க்ட‌ர் என‌க்கு வெறும் இன்கமிங்தான், அவுட்கோயிங்கே இ‌ல்லை. 10 நாளாகுது டா‌க்ட‌ர்.

‌டாக்டர்: ரீசா‌ர்‌‌ஜ் ப‌ண்ணு‌ங்க. அது‌க்கு எது‌க்கு எ‌ங்‌கி‌ட்ட வ‌ந்‌‌தீ‌ங்க

நோயாளி: அட ‌நீ‌ங்க வேற டாக்டர் கிட்டத்தட்ட 10 நாளா மலச்சிக்கல்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம போறீங்க?

டாக்டர்: அடப்பாவி நீ இன்னுமா உயிரோட இருக்க? நா‌ன் போ‌ஸ்மா‌ர்‌ட்ட‌ம்ல செ‌ஞ்சே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

No comments:

Post a Comment