👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
பெண் : சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு...
போலீஸ் : உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ?
பெண் : துவைக்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
Traffic police: எதுக்காக சைக்கிள இங்கு படுக்க வச்சுட்டு போற?
public: இங்க சைக்கிளை நிறுத்தாதீர்கள்-னு போர்ட் வச்சிருக்கிங்களே அதாங்க.....
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
போலீஸ்: பஸ் எப்படிய்யா விபத்தில் சிக்கியது?
பஸ் டிரைவர்: நான் நல்லா தூக்கத்தில் இருந்தேன். எங்கிட்ட கேட்ட எப்படி தெரியும்.
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
கமல் : அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்..
டிராபிக் போலீஸ் : டேய் வெளக்கெண்ண.. அவன் போகும் போது கிரீன் சிக்னல்... இப்ப ரெட்டுடா......
கமல் : 😀😀
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
சுப்பு: அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு ஏட்டைய்யா..
ஏட்டு: ஏன் சார்..
சுப்பு: இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
காவலர்: ஏம்மா... வீடு தீப்பத்தி எரியும்போது நீங்க மட்டும் தப்பிச்சு வந்துட்டீங்களாமே? உங்க கணவர் புகார் கொடுத்திருக்கார்.
மனைவி: அவர் பாவம் நல்லா தூங்கிட்டிருந்தார் எழுப்ப மனசு வரலை . . . அதான்!
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
போலீஸ் 1: அந்த ஆயுள் தண்டனை கைதிக்கு ஆனாலும் கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு
போலீஸ் 2: எப்படி சொல்ற?
போலீஸ் 1: எங்களுக்கெல்லாம் வி.ஆர்.எஸ் எப்பன்னு கேக்கறான்னா பாத்துக்கோயேன்.
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
போலீஸ்: வீட்டுல புகுந்து கொள்ளை அடிச்ச சரி! ஏன் உன் சட்டையில பயங்கர ஈரமா இருக்கு?
திருடன்: நான் கொள்ளையடிச்சிட்டு திரும்பும்போது மெகா சீரியல் பாத்துகிட்டிருந்து அந்த வீட்டு அம்மா என் மார்ல சாஞ்சுதான் அழுதாங்க எசமான்.
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
மணு கொடுப்பவர்: சார் நாங்க வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்
போலீஸ்: ஆச்சரியமா இருக்கே.
மணு கொடுப்பவர்: இதுக்கே ஆச்சரியப்பட்டா போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான் சார்.
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
ஏட்டு: சார், அந்த எக்ஸ் மினிஸ்டர் கைதியை ஒரே ஜெயில்ல ஒரு வருஷம் வெச்சது தப்பாப் போச்சு.
ஏசி : என்னாச்சுய்யா?
ஏட்டு: அந்த ஜெயிலை பிளாட் போட்டு வித்துக்கிட்டு இருக்காராம்.
👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
No comments:
Post a Comment