😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன்: நான் ஒரு விசயம் சொல்லணும்
அப்பா: சாப்பிடும்போது பேசக்கூடாது(சாப்பிட்டபிறகு)
அப்பா: என்னடா சொல்லு?
மகன்: உங்க சாப்பாட்டுல அம்மா விஷம் வச்சிருக்காங்க!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி தாங்க
அப்பா : கடவுள் நமக்கு எதுக்கு ரென்டு கால் தந்திருக்கிறார்?
மகன் : ஒன்னு ஹியர் போட ஒன்னு பிரேக் பிடிக்க
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்க!!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பையன்: அப்பா, எனக்கு ஒரு doubt..
அப்பா: கேளுடா
பையன்: fb-ல எல்லா பொண்ணுங்களும் அண்ணா அண்ணா-னு கூப்பிடறாங்களே அப்போ அவங்க எல்லாம் ஐயர் பொண்ணுங்களா?
அப்பா:??
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சிறுவன் : அப்பா, கல்யாணம் பண்ண எவ்ளோ செலவாகும்?
தந்தை : தெரிலே பா.. இன்னும் செலவு பண்ணிட்டு தான் இருக்கேன் !
சிறுவன் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அப்பா : ஏம்பா நான் அனுப்பின மெயில் கிடைச்சுதா?
மகன் : இல்லை கிடைக்கலையே !
அப்பா : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு உடனே சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!
மகன் : 😦😦
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சுப்பு : சித்தப்பா செத்துட்டாரு...... சாவுக்கு எல்லாமே நான்தான் செஞ்சேன்!
அப்பா : சரி.. சித்தப்பா எப்படிச் செத்தாரு?
சுப்பு : அதான் சொன்னேனே...... எல்லாம் நான்தான் செஞ்சேன்!
அப்பா : 😨 😨
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அப்பா : ஏண்டா! கணக்குப் பாடத்துல ஏதாவது உதவி செய்யட்டுமா?
பையன் : வேண்டாம்பா! நானே கொஞ்சம் தப்பாப் போட்டுக்கிறேன்!
அப்பா : 😧 😧
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தந்தை : டேய் ஏன்டா.. பரீட்சையில பெயில் ஆயிட்ட?
மகன் : பரிட்சையில பெயில் ஆயிட்டா திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம். ஆனா பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு பெயில் ஆகா முடியாதுல்ல.. அதாம்பா.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகள்: அப்பா உங்க டாக்டர் மாப்பிள்ளையோட கொடுமைக்கு அளவேயில்லாம போச்சுப்பா..
அப்பா: ஏம்மா என்ன பண்றாரு?
மகள்: ஆஸ்பிடல்ல கூட்டமே இல்ல.. உங்க வீட்ல இருந்து 4 பேர வந்து அட்மிட் ஆக சொல்ல சொல்லி என்ன துன்புறுத்துறாருப்பா.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன் : கலக்கப் போவது யாரு?
தந்தை : நீ தின்ன தீனிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல உன் வயிறுதான்.....
மகன் : 😣 😣 😣
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன் : அப்பா பைத்தியம்னா என்னப்பா?
தந்தை : சம்பந்தா சம்பந்தமில்லாம நீளமா, எதையாவது உளறிகிட்டே இருப்பாங்க, பேசறது எதுவுமே புரியாது, என்ன புரிஞ்சுதா?
மகன் : சுத்தமா புரியலையேப்பா . . .
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தந்தை: எந்த சப்ஜக்ட்லயும் பாஸ்மார்க் எடுக்காம வந்திருக்கியே அடுத்தது என்ன செய்யப்போற?
மகன்: அடுத்தது டாஸ்மார்க்தான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன் : அப்பா, ஆப்பிரிக்காவில் திருமணமாகிற வரைக்கும் மனைவியை பத்தி கணவனுக்கு ஒண்ணுமே தெரியாதாமே?
அப்பா : அது அங்க மட்டுமில்லை. எல்லா நாட்டிலயும் உண்டு. அதனாலத்தான் கல்யாணமே நடக்குது
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மகன்: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால கண்டபடி அடிச்சுட்டார்
அப்பா: ஏன் என்ன தப்பு செஞ்ச?
மகன்: 3 போட்டு, பக்கத்துல 3 போடச் சொன்னாங்க
அப்பா: இதுகூட தெரியலையா?
மகன்: 3 போட்டுட்டேன். இன்னொரு 3 எந்தப் பக்கத்துல போடனும்னு கேட்டேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அப்பா: கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா வேணுமா, இல்லை, தங்கச்சிப் பாப்பா வேணுமா ?
மகன்: எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி... நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அப்பா: என் பையன் பென்சில் பட்டாசு கேட்டான்னு அதை வாங்கிக் கொடுத்தேன்.
ஒருவர்: அதுக்கு ஏன் சார் இப்படி அலுத்துக்கறீங்க?
அப்பா: பட்டாசு பாதியிலேயே அணைஞ்சுடுச்சாம் இப்போ ஷார்ப்பனர் பட்டாசு வேணும்னு கேட்கறான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment