Monday, 23 July 2018

சர்தார்ஜி ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார் 1: டேய் எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

சர்தார் 2: கரண்ட் இல்லடா..

சர்தார் 1: சரி! சரி, பேனையாவது போடு..

சர்தார் 2: லூசாடா நீ? மெழுகுவத்தி அணைஞ்சிடாது?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நெப்போலியன் : என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது!!

சர்தார்ஜி : இப்போ சொல்லி என்ன பிரயோசனம், அகராதி வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்..

நெப்போலியன் : ????????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி : ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க?

மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு...

சர்தார்ஜி : முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் ஓடுகீறார்கள்?

மற்றவர் : ?????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இண்டர்வியூ அதிகாரி : வேலைக்கு சேரும்போது மாதம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.

சர்தார்ஜி : அப்ப நான் ஆறாவது மாதமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன் சார்.

இண்டர்வியூ அதிகாரி : ??????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர் : இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!

சர்தார்ஜி : அது மட்டும் முடியாது டாக்டர்!

டாக்டர் : ஏன்?

சர்தார்ஜி : எங்க வீட்டுல 4 டம்ளர் தான் இருக்கு டாக்டர்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி: இந்த புக் ஒரே போர்! வெறும் கேரக்டர்கள் பெயர்தான் இருக்கு! கதையே இல்லை!

லைப்ரேரியன் : வாடா வா! நீதான் நேத்து டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டுப் போனதா?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.

சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: பி.எ.

சர்தார்: அடப்பாவி!படிச்சதே ரெண்டு எழுத்து!அதையும் தலை கீழாபடிச்சிருக்கே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

Sardar: ஹலோ யார் பேசுறது

Lady: நான் செல்லம்மா பேசுறேன்

Sardar: நான் மட்டும் என்ன கோவமாவ பேசுறேன் ?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஜோசியர்: உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்ன 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும்

சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்கள கட்டிக்கலாமா ஜோசியரே.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார் 1: எதுக்கு சர்தார் butter-ஐ ஜன்னல் வழியா தூக்கிப் போடுறீங்க?

சர்தார் 2: butterfly பாக்கத்தான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ரயில் பயணம் செய்த சா‌ம் சிங் தோளில் பைனாகுலர் தொங்கிக் கொண்டிருந்தது.

அருகிலிருந்தவர்: ஏன் பைனாக்குலரை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்?

சா‌ம் சிங்: நான் என் தூரத்து உறவினரை பார்க்க போகிறேன். அது‌க்கு‌த்தா‌ன் எடு‌த்து‌ச் செ‌ல்‌கிறே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பாலாஜி: ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்....

சர்தார்ஜி: ஏதாவது பிரச்சினையா...?

பாலாஜி: ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க? எனக் கேட்டார்.

சர்தார்: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க. Parking for Two Wheelers only!.அதுக்குதான் கழட்டிக்கிட்டு இருக்கேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

காதலி: ஹலோ எங்க இருக்க?

சர்தார்ஜி: உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்!

காதலி: எதுக்கு வர்ற? வீட்ல யாரும் இல்லை!!

சர்தார்ஜி: ஐ!! யாரும் இல்லையா? (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா!) ஹலோ ஹலோ! போனை கட் செய்துவிடுகிறார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார் : மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?

நண்பர் : வேறொன்றுமில்லை கோழிதான்..

சர்தார் : அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?

நண்பர் : ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்

சர்தார் : அஞ்சு கோழி , சரியா?..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நடுவர்: முதல் கேள்வி, 5 5 எவ்வளவு?
சர்தார்: யோசித்துவிட்டு 20
பார்வையாளர்கள்: சர்தார்க்கு பரவாயில்லை இன்னொரு சான்ஸ் கொடுங்க.
நடுவர் : ஓ.கே, 7+3 எவ்வளவு?
சர்தார் : 8
பார்வையாளர்கள்: சர்தார்க்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..
நடுவர் : கடைசி சான்ஸ், 2+2 எவ்வளவு?
சர்தார் : 4
பார்வையாளர்கள் : சர்தார்க்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பக்கத்து வீட்டுக்காரன் காய்ச்சல்ல இருக்கான்னு பாக்க போனேன்..

சர்தார்ஜி: என்னையா.. உடம்பு இப்படி கொதிக்குது? ன்னு கேட்டா

ராமு: நெருப்புடா.. கபாலிடா..- ங்குறான்.

சர்தார்ஜி: சாவுடா-ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி 1: இவிங்கதான் என்னோட மனைவி கிளாரா!

சர்தார்ஜி 2: எனக்கு முன்னமே தெரியும்!

சர்தார்ஜி 1: எப்படித் தெரியும்?

சர்தார்ஜி 2: அது ஒரு கதை. நானும் கிளாராவும் ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க!

சர்தார்ஜி 1: என்னாது? ஒண்ணாவா?

சர்தார்ஜி 2: காலேஜ்ல மேத்ஸ் பீரியட்ல ரெண்டுபேரும் ஒண்ணா தூங்கும்போது HOD பார்த்திட்டார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒரு நாள் லைப்ரரியியனிடம், சர்தார்ஜி: என்ன புத்தகம் இது.. தலைப்பு இருக்கு.. நிறைய கதா பாத்திரங்களின் பெயர் இருக்கு ஆனா கதையே இல்லையே?

லைப்ரரியன் : அடப்பாவி காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருக்குற டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி: என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..

கோபி: நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தாரின் இரண்டு காதுகளும் சிவந்து போய் இருந்தது....டாக்டர் கேட்டார் அச்சச்சோ என்னாச்சு

டாக்டர் நான் துணிக்கு அயர்ன் செஞ்சிட்டு இருந்தப்போ.... போன் வந்திடுச்சு போனுக்கு பதிலா அயர்ன் பாக்ஸை காதுல வெச்சு

அது....சரி அந்த காது ?

அதே ஸ்கவுண்டரல் திரும்ப போன் பன்னிட்டான்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மேலாளர் : நீங்கள் எங்கு பிறந்தீர்கள்.

சர்தார் : இந்தியா

மேலாளர் :இந்தியாவில் எந்த பகுதி.

சர்தார் : முழு உடலும்தான் சார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

முதலாளி: புதிதாக வேலையில் சேர்ந்த சர்தார் இரவு 8 மணிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததை கண்ட முதலாளி சந்தோஷத்துடன் ஏன்னபா இவ்வளவு நேரம் வேலை பாக்குற என்ன வேலை செய்தாய்....

சர்தார் : அதுவா சார் கம்ப்யூட்டர் கீபோர்டுல a,b.c(alphapets) எல்லாம் மாறி இருந்தது அத சரி செய்தேன்...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கோர்ட்டில்,

ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..

சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...

ஜட்ஜ்: ஷட் அப்..

சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..

ஜட்ஜ்: ???????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார் (கவலையுடன்): வேய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே...

நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?

சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சாமு: அண்ணே, வாழ பிடிக்கலணே

சர்தார்ஜி: வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தானடா

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி: என்னணே அவனை போட்டு அடிக்கிறீங்க?

சாலினி: சக்கரை வாங்கிட்டு வீட்டுக்கு வந்து பாத்தா 100கிராம் குறைவா இருக்கே ஏன்டான்னு கேட்டா... நடந்தா சுகர் குறையும்னு சொல்றான்..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார்.

சர்தார் கோபமாக யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தாரும் மனைவியும் ஒரு காஃபி ஷாபிற்கு போனாங்க.

சர்வரை கூப்பிட்டு தம்பி ரெண்டு ஹாட் காஃபியே கொடு ஒரு எக்ஸ்ட்ரா டம்ளர் குடுத்துருபா

மனைவி கடிந்து கொண்டார் பாப்ரே பாப்...நான் கோல்ட் காஃபி தானே கேட்டேன்

நான் தான் எக்ஸ்ட்ரா டம்ளர் கேட்டிருக்கேன்ல ஆத்தி குடுக்குறேன். அவங்களே ஆத்தி கொடுத்தா ரேட் ஜாஸ்தி மா

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த சர்தார் புலம்பினார்

ஹையோ... என்ன மார்டர்ன் ஆர்ட்டோ,.. மோசமா இருக்கே

பக்கத்தில் இருந்தவர் ஜி அது கண்ணாடி

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பார்க்கில் ஒருவர் சர்தாரிடம் கேட்டார்....

ஏன் மன்மோகன் சிங் காலைல வாக்கிங் போகாம சாயங்காலமா வாக்கிங் போறார் ?

சர்தார் அரே பாய்.... அவரு P.M ... A.M இல்லே...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தெருவில் போன சர்தாரை நாய் துரத்த எப்படியோ தப்பிச்சு மாடி ஏறினார்.

இதை மேலிருந்து கவனித்தவர் ஏன் சிரிச்சிக்கிட்டே வரீங்க

ஹி..ஹி... நான் ஹட்சில் இருந்து இப்ப ஏர்டெல்லுக்கு மாறிட்டேன் அதுக்கு தெரியல போல...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இங்கிலீஸ் ஆசிரியர் எல்லோரையும் கிரிட்கெட்டை பற்றி கட்டுரை எழுத சொன்னாங்க

சர்தாரிடம் அதுக்குள்ள எழுதியிட்ட யா எங்கே காட்டு

DUE TO RAIN NO MATCH

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வேலைக்காரன்: இரண்டு சீப்பு வாழப்பழம் வாங்கிட்டு வர சொன்னாங்க வாங்கி கொடுத்தா கழுவி கழுவி ஊத்துராங்க நீங்களே சொல்லுங்க செஞ்சது சரியா தப்பா??

சர்தார்ஜி: சரி..

முதலாளிம்மா: இரண்டு சீப்பு வாழப்பழம் கேட்டா, 2சீப்பு,1 வாழைப்பழம் வாங்கிட்டு வந்திருக்காங்க!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தாருக்கு நடந்த விவாகரத்து

சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.

நீதிபதி: உங்களிடம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.

சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜியும், பணியாளும்

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.

பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.

சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தாரும் ஆசிரியரும்

ஆசிரியர் : (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) சார் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தவேண்டும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தாரும் அவரது பெண் தோழியும்

சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.

தோழி: சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

முட்டாள் சர்தார்ஜிகள்

இரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானங்களும் மோதிக் கொண்டு குஜராத் சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர்.

உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பஸ் பயணிகள்

சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார். என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார்.

ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயணிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மேலாளர்: உன் தகுதி என்ன?

சர்தார்: நான் Ph.D

மேலாளர்: Ph.Dன்னா என்ன?

சர்தார்: Passed high school with Difficulty.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி 1: ஏய் வா, போலீஸ் கிட்ட போய் குடுத்துட்டு வருவோம்.

சர்தார்ஜி 2: வழியில ஏதாவது ஒண்ணு வெடிச்சிடுச்சுன்னா?

சர்தார்ஜி 1: போலீஸ் கிட்ட பொய் சொல்லிடுவோம் ஒண்ணுதான் கிடைச்சதுன்னு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி 1: AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?

சர்தார்ஜி 2: CD போட்டுப் பார்க்கும்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி 1: EF க்கு உடம்பு சரி இல்லன்னா எங்க போகும்?

சர்தார்ஜி 2: GH க்குப் போகும்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி 1: IJKL க்கு எனிமி யாரு?

சர்தார்ஜி 2: MN (எமன்) தான்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி 1: OP ரேசனுக்குப் போனா?

சர்தார்ஜி 2:Q லதான் நிக்கும்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார்ஜி 1: RS க்கு தலை வலிச்சா?

சர்தார்ஜி 2: T குடிக்கும்!

https://goo.gl/XEcKBT

சர்தார்ஜி 1: UVWXY க்கு பறக்கனும்னா?

சர்தார்ஜி 2: Z (ஜெட்)ல போகும்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார் 1 : டேய் எதுக்குடா மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கே

சர்தார் 2 : கரண்ட் இல்லடா

சர்தார் 1 : சரி... சரி அந்த பேனையாவது போடு

சர்தார் 2 : ஏண்டா உனக்கு அறிவு இருக்குதா ... மெழுகுவர்த்தி அணைஞ்சுடாது?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தாருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது

டின் & மார்டின் - ன்னு பேர் வெச்சார்

அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு

பீட்டர் & ரிபீட்டர் - ன்னு பேர் வெச்சார்

அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு

மேக்ஸ் & க்ளைமேக்ஸ் - ன்னு பேர் வெச்சார்
அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு என்ன பேர் வெச்சு இருப்பாரு....

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சர்தார் டிக்கட் கிழிப்பவரிடம் திரும்ப திரும்ப சொன்னார்

நாங்க 19 பேரு...நாங்க 19 பேரு

இன்னொருத்தர் இருந்தா ...20 பேரு ஆகி இருக்குமே ?

19 பேரு சேர்க்கரதுக்கே ரெம்ப கஷ்டமா போச்சுது, இது 18 ப்ளஸ் படம் தானே 19 பேர் போதுமே

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ப்யூனை கூப்பிட்டு அவசரமாக ஒரு பிளம்பரை கூட்டி வரச்செய்தார் புரெபசர் சர்தார்.

உங்கள எதுக்கு இங்க வரச் சொன்னன் தெரியுமா?

பிளம்பர் தலையை சொரிந்து கொண்டே தெரியலயயே சார்

ஃக்வெஸ்டின் பேப்பர் லீக்காகிடுச்சாம் சீக்கரம் கண்டுபிடிச்சு அடைக்கனும்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர், எனக்கு இனிமே இதயத்தில எந்தப் பிரச்சினையும் இல்லையே?

டாக்டர் : கவலையேபடாதீங்க, இனிமே நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க இதயம் நல்லா வேலை செய்யும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?

நோயாளி 2: டாக்டர் தான் "அரை(றை) மூடி " டானிக் குடிக்க சொன்னார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல.

டாக்டர் : வயிறு வலிக்கும் போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்.

டாக்டர்: அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நர்ஸ் : டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க...

நோயாளி : நான் ஆப்ரேஷன் பேஷண்ட்...!

நர்ஸ் : அப்ப டிக்கெட் வாங்கிட்டு உட்காருங்க!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர்: நான் தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்!

நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC-ஐ காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??

டாக்டர் : ஆமாம் ,

நோயாளி : ஆனா , அந்த Tonic பாட்டில ஒரே ஒரு மூடி தானே இருக்குது ?

டாக்டர் : ?????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: காதுல பஸ் ஓடுர மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்

டாக்டர்: பரிசோதித்து விட்டு அப்படி ஒண்ணும் எனக்கு... கேட்கலையே!

நோயாளி: இப்போ ஏதாவது சிக்னல்-ல நின்னுருக்குமோ?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!

டாக்டர்: தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.

டாக்டர்: எப்போ நடந்தது?

பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.

டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?

பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷன்ட் : நர்ஸ் நீங்க ஏன் இதயத்தையே திருடிடிங்க ..

நர்ஸ் : போடா லூசு... டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என் உடம்புக்கு என்ன பண்ணுதுன்னே சொல்லத் தெரியலை..

டாக்டர்: டோன்ட் ஒர்ரி.. எனக்குக் கூட எப்படி ஆபரேசன் பண்ணப் போறேன்னு சொல்லத் தெரியலை.. நான் பயப்படறேனா..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் மாத்திரை சின்னதா இருக்கு!

டாக்டர்: அதோட விலையை பாருங்க பெருசா இருக்கும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என்னை நாய் கடித்து விட்டது.

டாக்டர்: எந்த இடத்துல?

நோயாளி: பெருமாள் கோவில் சந்துல

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நர்ஸ்: இப்போ வந்த பேஷண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்னு எப்படிச் சொல்றீங்க டாக்டர்?

டாக்டர்: அவருக்கு வந்திருக்கறது வைரஸ் ஃபீவர்-னதும், ஆன்ட்டி வைரஸ் போட்டா சரியாயிடுமான்னு கேட்டாரே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: தற்கொலை செஞ்சுக்க பல தடவை முயற்சி செஞ்சேன் டாக்டர்!

டாக்டர்: பேசாமே என்கிட்டே ஒரு ஆபரேஷன் பண்ணிக்கிட்டா போதுமே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர்: உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

மனைவி: அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்: மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: ரெண்டு நாளைக்கு ஆபரேஷனை தள்ளிப்போட முடியுமா டாக்டர்?

டாக்டர்: ஏன்?

நோயாளி: இந்த இரண்டு நாளுக்குள்ள என்னோட கடைசி ஆசையை நிறைவேத்திக்கறதுக்குத் தான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷண்ட்: ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டானு சொல்றீங்க?

நர்ஸ்: டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!

டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!

நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில் தான் இருக்கிறது.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பேஷண்ட்: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை

டாக்டர்: இந்த டானிக்கை சாப்பிடுங்க.

பேஷண்ட்: சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?

டாக்டர்: நல்லா இருமலாம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர் : நீங்க பிழைக்கிறது கஷ்டம்......

நோயாளி : ஏன் டாக்டர்?

டாக்டர் : ஸ்டெட்டஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் ரொம்ப டென்ஷனா இருக்கு..

டாக்டர் : டென்ஷனக் குறைக்கத்தான் மாத்திரை எழுதிக் கொடுத்தேனே..

நோயாளி : மாத்திரைப் பத்தியெல்லாம் வர்ற செய்தியப் படிச்சா இன்னும் டென்ஷன் அதிகமாகுது டாக்டர்.. வேறு எதாச்சும் செய்யுங்க......

டாக்டர் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் நான் கடவுளா இரு‌க்குறதை உணர்றேன்.

டாக்டர் : ஓ! அப்படியா, கொஞ்சம் ஆரம்பத்திலேருந்து சொல்லுங்க.

நோயாளி : முதல்ல ஆகாயம், பூமி இதையெல்லாம் படைச்சேன்.

டாக்டர் : 😧 😧

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : என்னய்யா, பாம்பு மாத்திரைனு சொல்ற. இ‌வ்ளோ பெ‌ரிசா இரு‌க்கு.

மருத்துவர் : இது அனகோண்டா பாம்பு மாத்திரைங்க..

நோயாளி : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : என்ன டாக்டர் நேத்திக்கு ‌பிர‌ச்‌சினை ஒ‌‌‌ன்று‌ம் இ‌ல்லை. மைனர் ஆபரேஷன் ப‌ண்‌ணிடலா‌ம்னு சொ‌ல்‌லி‌ட்டு, இ‌ன்‌னி‌க்கு மேஜர் ஆபரேஷ‌ன் செ‌ஞ்சாகனு‌‌ம் சொல்றீங்களே?

மருத்துவர் : நான் என்ன பண்ணட்டும்! நா‌‌ன் வா‌ங்க இரு‌ந்த ‌நில‌த்து‌க்கு நேத்தி வரைக்கும் தொகைய குறை‌ச்சலா சொ‌‌ல்‌லி‌க்‌கி‌ட்டிரு‌ந்த தரக‌ர், இன்னிக்கு 5லட்சம் ஆகும்னு சொல்லிட்டாரே!

நோயாளி : 😯 😯

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : எ‌ல்லா‌த்து‌க்கு‌ம் மு‌ன்பண‌ம் கே‌க்கறதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌க்கே‌ன். இவ‌ங்க எ‌ன்னடா‌ன்னா சாவு‌க்கே மு‌ன்பண‌ம் கே‌க்குறா‌ங்களே?

உறவினர் : ‌நீ‌ங்க எ‌ன்ன சொ‌ல்‌றீ‌ங்க பு‌ரியலயே?

நோயாளி : நாளை‌க்கு நட‌க்க‌ப்போற ஆபரேஷனு‌க்கு இ‌ன்னை‌க்கு அ‌ட்வா‌ன்‌ஸ் க‌ட்ட சொ‌ல்றா‌ங்களே அதை‌ சொ‌ன்னே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : வயித்து வலி பொறுக்க முடில டாக்டர்!

டாக்டர் : வயித்த வலிக்கும் போது எதுக்கு பொறுக்க போறீங்க!

நோயாளி : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் வரவர ரொம்ப சந்தேகப்படற குணம் ஒரு வியாதியாவே ஆயிடுச்சு!

டாக்டர் : அப்படி என்னத்த சந்தேகப்படுவீங்க?

நோயாளி : உதாரணத்துக்கு நீங்க எம்.பி.பி.எ‌ஸ் படிக்கலையோ அல்லது படிச்சு ஃபெயில் ஆயிட்டீங்களோ அல்லது நீங்க வெறும் போலி டாக்டரோ இப்படி எல்லாம் சந்தேகம் வருது டாக்டர்.......

டாக்டர் : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு.

மருத்துவர் : நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயா‌ளி : க‌ண் ச‌ரியா தெ‌ரிய மா‌ட்டே‌ங்குது டா‌க்ட‌ர்..

கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க!

நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: வெறு‌ம் கா‌ய்‌ச்சலு‌க்கு‌த்தா‌ன் உ‌ங்க கி‌ட்ட வ‌ந்தே‌ன். ச‌ரியா‌கிடு‌ம்னு நீங்க கொடுத்த மாத்திரையை ரெண்டு நாளாகச் சாப்பிட்டேன். இப்ப ரொ‌ம்ப மோசமா‌கி‌வி‌ட்டது. பேசக்கூட முடியலே!

டாக்டர்: உங்க சாப்பாட்டிலே ஏதாவது கோளாறா இருக்கும்? என்னென்ன சாப்பிட்டிங்க? சொல்லுங்க?

நோயாளி: அ‌ச்ச‌ச்சோ... சா‌ப்‌பாடு‌ம் சா‌ப்‌பிடனுமா? இ‌ந்த மா‌த்‌திரை ம‌ட்டு‌ம் சா‌ப்‌பி‌ட்டா போது‌ம் உட‌ம்பு ச‌ரியா‌கிடு‌ம்னு ‌நீ‌ங்கதானே சொ‌ன்‌னீ‌ங்க

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: நேத்து ராத்திரி எக்கச்சக்கமா தூக்க மாத்திரைய சாப்டுட்டேன் டாக்டர்!

டாக்டர்: அப்புற‌ம் என்ன ஆச்சு?

நோயாளி: என்ன ஆகுமோங்கற பயத்துல தூக்கமே வரல்ல டாக்டர்.

டாக்டர்: ?????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என் காதுல எ‌ப்போது‌ம் ஒரு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு எங்க செவிடாயிடுவோமோன்னு பயமா இருக்கு!

டாக்டர்: நல்லதுதான! செவிடாயிட்டா சத்தம் கேக்காது பாருங்க!.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: என்ன அந்த டாக்டர் கத்தி, அருவாமனைனு எடுத்துக்கிட்டு ஆபரேஷன் தியேட்டர்குள்ள வர்றாரே பாக்கவே பயமா இருக்கு!

நர்ஸ்: பயப்படாதீங்க! ஆபரேஷன் செஞ்சுகிட்டே, மத்தியான சமையலுக்கு தேவையான காய்கறியையும் நறுக்கற பழக்கம் அவருக்கு எப்பவும் உண்டு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தனியார் மருத்துவமனையில் டாக்டரை பார்த்துவிட்டு வந்த நோயாளி மற்றவரிடம் :

நோயாளி: இவரு போலி டாக்டர் மாதிரி தெரியுது...

தாமு: ஏன் அப்படி சொல்றீங்க?

நோயாளி: இல்ல, மருந்தோட பேர சொல்லிட்டு எங்கிட்ட ஸ்பெல்லிங் கேட்டாரு அதான்...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர்! டாக்டர்! என் நாக்கு வெளில தொங்கிகிட்டே இருக்கு..

டாக்டர்: கொஞ்சம் அப்படியே இருங்க என் ஸ்டாம்பையும், கவரையும் கொஞ்சம் ஒட்டிக்கறேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் நீங்க சொன்னீங்கனுட்டு சிகரட்ட நிறுத்தி அதுக்கு பதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னா...

டாக்டர்: ஏன்? நல்ல விஷயம்தான? இதுல என்ன பிரச்சனை இருக்கு?

நோயாளி: எவ்வளவு தீக்குச்சி வேஸ்ட் பண்ணினாலும் சூயிங்கம் பத்தவே மாட்டேங்குதே...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் எப்ப வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் கடுமையா தலை வலிக்குது... ரொம்ப களைப்பா இருக்கு.

டாக்டர்: அது ஒண்ணும் இல்ல... டெய்லி 2-3 பெக் சாப்டுட்டு டின்னர் சாப்டுங்க சரியாப் போயிடும்..

நோயாளி: போன தடவை வந்தப்ப டிரிங்க்ஸ் வேண்டாம் கம்ப்ளீட்டா நிறுத்துங்கன்னு சொன்னீங்களே?

டாக்டர்: அதுக்கப்புறம்தான இந்த நர்சிங் ஹோமையே கட்டினேன்...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒரு நோயாளி தன் மனைவியுடன், ஆஸ்பத்திரியில்: டாக்டர் தெரியாம ஸ்பூனை முழுங்கிட்டேன். கஷ்டமா இருக்கு.. .

மனைவி: ஆமாம் டாக்டர். .. ஸ்பூன் இல்லாம ஊறுகாய் எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. .

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர், நான் நூறு வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு.

டாக்டர்: அப்ப சரி நானா ஜோசியரான்னு ஒரு கை பார்த்துடுவோம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் எல்லா மருந்தும் வாங்கிட்டேன். இதோ மேல ஒண்ணு எழுதியிருக்கீங்க. அது மட்டும் புரியல...

மருத்துவர் : பேனா எழுதாம இரு‌ந்தது, அதா‌ன் அ‌ங்க ‌கி‌ரி‌க்‌கி பா‌‌த்தே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் காது கேட்கலைன்னா இந்த மருந்து போடலாமா பாருங்க?

மருத்துவர் : காதுதா‌ன் கேட்கலை‌ல்ல.. அ‌ப்புற‌ம் ஏ‌ன் நீங்களா போடுறீங்க, அதுவா கேட்டா பார்த்துக்கலாம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி : டாக்டர் என்னோட இ.சி.ஜிய வச்சுகிட்டு என்ன பண்றீங்க?

மருத்துவர் : சரியான நேரத்துல சொன்னீங்க, இது என்னடான்னு குழம்பிப் போயிட்டேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: இதுவரைக்கும் ஏகப்பட்ட கண்ணாடியப் போட்டும் கண்ணு சரியா தெரியமாட்டேங்குதே சார்!

டாக்டர்: எ‌ப்படி போ‌ட்டீ‌ங்க?

நோயாளி: கை‌யில எடு‌த்து தரை‌யில போ‌ட்டே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் டாக்டர் கை பயங்கரமா நடுங்குது டாக்டர்

டாக்டர்: நீங்க அதிகம் குடிப்பீங்களா?

நோயாளி: எங்க டாக்டர் அதான் கை நடு‌ங்‌‌‌கி‌க்‌கி‌ட்டே இரு‌க்கே. நிறைய கீழவே சிந்திடுது டாக்டர்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டாக்டர் என‌க்கு ஆபரேஷ‌ன் செ‌ய்ற நீங்க தான் என‌க்கு தெய்வம்!

டாக்டர்: ஆபரேஷன் செ‌ய்ற வரை‌க்கு‌ம் தா‌ன் நா‌‌ன் தெ‌ய்வ‌ம். அது‌க்கு‌ப் ‌பிறகு ‌நீ‌ங்கதா‌ன்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: டா‌க்ட‌ர் என‌க்கு வெறும் இன்கமிங்தான், அவுட்கோயிங்கே இ‌ல்லை. 10 நாளாகுது டா‌க்ட‌ர்.

‌டாக்டர்: ரீசா‌ர்‌‌ஜ் ப‌ண்ணு‌ங்க. அது‌க்கு எது‌க்கு எ‌ங்‌கி‌ட்ட வ‌ந்‌‌தீ‌ங்க

நோயாளி: அட ‌நீ‌ங்க வேற டாக்டர் கிட்டத்தட்ட 10 நாளா மலச்சிக்கல்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நோயாளி: என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம போறீங்க?

டாக்டர்: அடப்பாவி நீ இன்னுமா உயிரோட இருக்க? நா‌ன் போ‌ஸ்மா‌ர்‌ட்ட‌ம்ல செ‌ஞ்சே‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁