😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
சோனு: முடி சின்னதா வெட்டிவிடுங்க
தாமு: எவ்வளவு சின்னதா
சோனு: பொண்டாட்டி கைல புடிக்க முடியாத அளவுக்கு
தாமு: ?????
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
வாடிக்கையாளர்: ஒரு காப்பி எவ்வளவு சார்?
கடைக்காரர்: 5 ரூபாய்.
வாடிக்கையாளர்: எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
கடைக்காரர்: டேய்.சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
கடைக்காரர்: நீங்க உடைத்த பொருள் 100 வருஷம் பழையது தெரியுமா?
வாடிக்கையாளர்: அப்பாடா! நான் அதப் புதுசுனு நெனச்சு பயந்துட்டேன்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
Phone Voice : நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்...
Mr. Bean : ப்ளிஸ் அவரைக் கொஞ்சம் உள்ள வரச்சொல்லுங்க !
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
நான் நடந்து சென்றபோது மருந்துக்கடையில் ஒரு பெண்ணுக்கும், மருந்துக் கடைக்காரருக்கும் கடும் வாக்குவாதம்.. அருகே சென்று என்னவென்று ஒட்டுக் கேட்டதில்,
மருந்து கடைக்காரர்: இந்தாம்மா, 10 தூக்க மாத்திரை வேணும்னா டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேணும், வெறும் உன்னோட மாமியார் ஃபோட்டோ மட்டும் போதாது.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
வாடிக்கையாளர்: ஏம்பா உருளை என்ன விலை?
கடைக்காரர்: கிலோ பத்து ரூபாய்
வாடிக்கையாளர்: சொல்லி கொடுப்பா
கடைக்காரர்: உருளைக் கிழங்கு கிலோ பத்து ரூபாய். ம்.. சொல்லிட்டேன் பைய பிடிங்க.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
No comments:
Post a Comment