😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன் தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!
ஒருவர் : அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?
டாக்டர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருத்தர் : டாக்டர்.. உங்க Certificate கொடுங்க..
டாக்டர் : ஏன்?
ஒருத்தர் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு.. அவங்க டாக்டர் Certificate கேட்குறாங்க அதான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : என்ன டாக்டர், இந்த நடுராத்திரியிலே கிளினிக்கைத் திறந்து வெச்சிகிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவான்னுதான்.
ஒருவர் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC-ல காலைல ஒரு மூடி, ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க??
டாக்டர் : ஆமாம்..
நோயாளி : ஆனா, அந்த Tonic bottle-ல ஒரே ஒரு மூடி தானே இருக்குது?
டாக்டர் : ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.
டாக்டர்: இதிலொன்னும் தப்பில்லையே...
நோயாளி: திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: பகல் கனவு பலிக்குமா டாக்டர்...!
டாக்டர்: பலிக்காது ஏன் கேட்கறீங்க...?
நோயாளி: நீங்க ஆபரேசன் செஞ்சு, நான் பிழைக்கிற மாதிரி கனவு கண்டேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: எதுக்கு டாக்டர் மூச்சை இழுத்துவிட சொல்றீங்க?
டாக்டர்: ஆபரேஷனுக்குப் பிறகு மூச்சுவிட முடியாது! அதான் இப்பவே ஆசைதீர இழுத்து விட்டுக்கங்க!
நோயாளி: ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கோவிந்தன்: டாக்டர், நான் போதைல தெரியாம ஒரு எலியை உசுரோட முழுங்கிட்டேன். என்னை காப்பாத்துங்க!
டாக்டர்: இந்தாங்க, இந்த எலிமருந்தை சாப்பிடுங்க. எலி செத்திடும். அப்புறம் ஈசியா வெளியில் எடுத்திடலாம்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்-ல சாப்பிட்டு முடிக்கணும்-னு சொல்றீங்களே, ஏன்?
டாக்டர்: ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.
நோயாளி: ?????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?
டாக்டர்: அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
நோயாளி: இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
நோயாளி: அதுங்க சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
டாக்டர்: என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
நோயாளி: ??????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: அந்த ஹார்ட் பேஷண்ட் சாகக் கிடக்கிறார்ன்னா, அதுக்கு நீங்கதான் காரணம்!
நர்ஸ்: என்ன சார், குண்டைத் தூக்கி போடறீங்க?
டாக்டர்: பின்ன என்ன? 8 மணிக்கொருதரம் 2 மாத்திரை கொடுன்னு சொன்னா, 2 மணிக்கொருதரம் 8 மாத்திரை கொடுத்திருக்கே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்-னு சொல்றீங்க?
டாக்டர்: இல்ல, உள்ளபோன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பாக்க ஆசையா இருக்கு...
நோயாளி: ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தேவி : டாக்டர் என் கணவருக்கு ஞாபகமறதி வியாதி அதிகமா போச்சு.
டாக்டர் : ஏன் ?
தேவி : அவருதான் டாக்டர் சமையல் பண்றாரு ஆனா, சாப்பிடும் போது சமையல் நல்லா இல்லை-னு என்னையத் திட்டுறாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: சொத்துபத்து எக்கச்சக்கமா இருந்தும் என்ன பண்றது டாக்டர்..? கிட்னியிலே கல்லு இருக்கே?
டாக்டர்: கவலைப்படாதீங்க .. எல்லாத்தையும் கரைச்சுடுவோம்!
நோயாளி: ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ராமு: டாக்டர்.. என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா
டாக்டர்: எந்த அளவுக்கு பாக்குறாங்க??
ராமு: கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.
டாக்டர் : இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?
ஒருவர் : நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க... அதான்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தேவி : டாக்டர், இவர் என் காதலர், நல்லவரா? கெட்டவரா? செக் பண்ணனும்.
டாக்டர் : ஓகே மேடம், செக் பண்ணி சொல்றேன். ஆனா, ஏன் மாதம் ஒரு புது ஆளோட வர்றீங்க?
காதலன் : ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : எக்ஸ்ரே படத்தைப் பார்த்துத்தான் ரிசல்ட் சொல்லிட்டேனே... ஏன் அதை திரும்ப கொண்டு வந்துருக்கிறீங்க?
நோயாளி : இவ்வளவு பணம் செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்ல எடுத்துத் தரலேன்னு என் பொஞ்சாதி திட்டறா டாக்டர்!
டாக்டர் : ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : எப்ப டாக்டர் எனக்கு பல் கட்டுவீங்க?
டாக்டர் : இருங்க கயிறு வந்துடட்டும்..!
நோயாளி : ?????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : வாயில் என்ன கட்டு?
நோயாளி : எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு, வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...
டாக்டர் : ??????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ரமணன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்-னு இருக்கேன்...
வேலு : எப்படியோ ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்க!!
ரமணன் : ??????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியது தானே.....
நோயாளி : ?????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : நாங்க கொடுத்த பில்லை ஏன் தூக்கிபோட்டீங்க
நோயாளி : நீங்க தானே டாக்டர் உங்க இதயம் வீக்கா இருக்கு கவலை தர்ற விஷயங்களை தூக்கி எறின்னு சொன்னீங்க
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பாபு: டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
டாக்டர்: அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: என்ன டாக்டர் இது! மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர்: அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.
நர்ஸ்: டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...
டாக்டர்: சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!
நோயாளி: ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?
டாக்டர்: நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும் தான் பார்ப்பேன்...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத்தான் டாக்டர் புரியுது.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?
நர்ஸ்: ஒண்ணும் இல்லை சார்!
டாக்டர்: அட ஆச்சரியமா இருக்கே!
நர்ஸ்: சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ப்ரீ?
டாக்டர்: எப்ப வந்தாலும் ப்ரீ கிடையாது... பீஸ் வாங்குவேன்.....
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: நீங்க உடம்பைக் குறைக்கணும், இனிப்பைக் குறைக்கணும், காரத்தைக் குறைக்கணும்..
நோயாளி: டாக்டர், நீங்க பீஸ்ஸை குறைக்கணும்..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: நர்ஸ் எனக்கு காய்ச்சல் விட்டுவிட்டு அடிக்குது!
நர்ஸ்: விடாம அடிக்குறதுக்கு அதென்ன உங்க மனைவியா? காய்ச்சல்னா அப்படித்தான் அடிக்கும்!!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா ?
பேசண்ட்: பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர் !
டாக்டர்: ??????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும். அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேசன்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி: இருமல் நிற்க மாட்டேங்குது டாக்டர்...
டாக்டர்: அப்படின்னா அங்க உட்கார வையுங்க...! இல்ல படுக்க வையுங்க...!
நோயாளி: ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பேசண்ட்: டாக்டர்.. எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவா இருந்தீங்க.
பேசண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !
மற்றவர் : ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.
டாக்டர் : ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்?
டாக்டர் : தெரியுமே... ஏன் கேட்கறீங்க?
நோயாளி : இல்லை... பார்வை நேரம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை-ன்னு போர்ட் வச்சிருக்கீங்களே... அதான் கேட்டேன் ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கணவன் : டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..
டாக்டர் : அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணினே..?
கணவன் : சந்தோசத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர், என் பொண்டாட்டி நைட்டு தூங்கவே மாட்டேங்குறா. முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டிருக்கா டாக்டர்
டாக்டர் : எப்போலேந்து இப்படி இருக்கு?
நோயாளி : எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருத்தர் : டாக்டர்... உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் : ஏன்?
ஒருத்தர் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு.. அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : மாடில இருந்து எப்படி விழுந்திங்க?
நோயாளி : ஐயோ அம்மா-னு கத்திகிட்டே விழுந்தேன் டாக்டர்..!!
டாக்டர் : ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : கவலைப்படாதீங்க, நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
நோயாளி : ஐயோ டாக்டர், எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பெண் : ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?
டாக்டர் : எதுக்கும்மா கேக்கறீங்க?
பெண் : பட்டுச்சேலை வாங்கின பில்லை என் கணவருக்கிட்ட காட்ட வேண்டிருக்கு அதான்..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : நாய் துரத்துற மாதிரியே கனவு வருது டாக்டர்.
டாக்டர் : அப்படியா மூணு, நாலு கல்லை வைத்துக்கொண்டு தூங்கு நாய் துரத்தாது.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காசை முழுங்கிட்டான்.
டாக்டர் : அப்படியா ! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.
அப்பா : காசை மட்டும் எடுங்க டாக்டர்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : உங்க பிரச்சினைக்கு என்ன காரணம்னு தெரியலை. ஒரு வேளை அளவுக்கு அதிகமா குடிச்சதால இருக்கலாம்னு நினைக்கிறேன்.
நோயாளி : பரவாயில்லை டாக்டர். நீங்க எப்போ குடிக்காம இருப்பீங்கன்னு சொல்லுங்க, நான் வரேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : ஏன் டாக்டர் திடீர்னு கண்ணை மூடிக்கிட்டீங்க ?
டாக்டர் : பார்வை நேரம் முடிஞ்சிடிச்சு, போயிட்டு நாளைக்கு வாங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : நர்ஸ்... அந்த நோயாளிக்கு பிபி இருக்கா ?
நர்ஸ் : இல்ல ?
டாக்டர் : பல்ஸ் இருக்கா ?
நர்ஸ் : இல்ல ?
டாக்டர் : சுகர் இருக்கா ?
நர்ஸ் : உயிரே இல்ல, அப்புறம் எப்படி இது எல்லாம் இருக்கும் ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : தெரியுமா சேதி..? இந்தியா ஒலிம்பிக்குல தங்கம் வாங்கியிருக்கு..!
நோயாளி : இதை ஏன் டாக்டர் இப்போ சொல்றீங்க..?
டாக்டர் : நீங்கதானே, ஆபரேசன் முடிச்சுட்டு வந்து நல்ல சேதி சொல்லுங்க டாக்டர்ன்னு கேட்டுகிட்டீங்க..!
நோயாளி : ?????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பெண் : டாக்டர் ! என் கணவருக்கு வர வர ஞாபக மறதி கூடிக்கிட்டே போகுது ?
டாக்டர் : ஏன் என்ன செய்யறார் ?
பெண் : திடீர் திடீர்னு என்ன சமைக்கச் சொல்லி சாப்பாடும் போடச் சொல்றாரு ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மருமகள் : வர வர மாமியார் தொல்லை அதிகமாகப்போச்சு ஆப்ரேசன் தேதி சொன்னிங்கன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் ?
டாக்டர் : ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கணவன் : டாக்டர் கல்யாணமாகி எட்டு வருசமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை?
டாக்டர் : வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க!
கணவன் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : உங்க பையனுக்கு நாளை மேஜர் ஆப்ரேசன் ?
தந்தை : டாக்டர்... என் பையன் ரொம்ப சின்னவன். மைனர் ஆப்ரேசன் வேண்ணா பண்ணுங்களேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மனைவி : டாக்டர்... என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.
டாக்டர் : இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?
மனைவி : ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : கண்ணாடியை கழட்டிட்டா எதுவுமே தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : நிஜமாவா ?
நோயாளி : ஆமாம், கண்ணாடியை கழட்டிட்டனா இல்லையான்னு கூட தெரியமாட்டேங்குது டாக்டர்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : உங்க மாமியாருக்குப் பண்ண ஆபரேசன்ல ஒரு சின்னத் தப்பு நடந்திருச்சு
பெண் : என்ன டாக்டர், நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கிற நம்பிக்கைலதானே உங்ககிட்டே கூட்டிட்டு வந்தேன்.
டாக்டர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.
ஒருவர் : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : ஆபரேசன் வேண்டாம்னு திரும்ப வார்டுக்கே அழைச்சிட்டு போறீங்களே ஏன் டாக்டர் ?
டாக்டர் : நீங்க அதிர்ஷ்டகாரர் நான் எதிர்பார்த்த பணம் வேறு இடத்திலே இருந்து கிடைச்சிடுச்சு !
நோயாளி : ????????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : எதுக்கு நாதஸ்வரத்தைக் கொண்டுவந்து என்கிட்டே காட்டுறீங்க...?
வித்வான் : நீங்கதானே என்னோட பீப்பி (PP) பார்க்கணும்னு சொன்னீங்க...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களே ?
டாக்டர் : அதனாலே என்ன ?
ஒருவர் : மேலே போகும் வழின்னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேசண்ட்ஸ் எப்படி வருவாங்க ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : ஹலோ டாக்டர், அவசரமா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ?
டாக்ர் : யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?
ஒருவர் : நான்தான் உங்க பேசண்ட். நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : மனைவிக்கு ஆபரேசன் நடந்தப்போ அழுதுட்டிருந்தாரேன்னு, ஆபரேசன் சக்ஸஸ்ன்னு போய்ச் சொன்னேன்.
நர்ஸ் : சந்தோசமாயிட்டாரா ?
டாக்டர் : இல்ல, இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சுட்டார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : உடம்பெல்லாம் கன்னாபின்னானு வேர்க்குது டாக்டர்.
டாக்டர் : கவலைப்படாதீங்க... செக் பண்ணிடலாம்...
ஒருவர் : நான் ட்ரீட்மெண்ட்டுக்கு வரலை டாக்டர், உங்க ஏ.ஸி. ரூம்ல கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவன் : தூர எது இருந்தாலும் தெரிய மாட்டேங்குது டாக்டர்.
டாக்டர் : அப்ப கிட்டப்போய் பாருங்க.
ஒருவன் : நிலாவையெல்லாம் எப்படி டாக்டர் கிட்டே போய் பார்க்க முடியும் ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : டாக்டர் அந்த ஆளு ஆபரேசன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க என்னடான்னா எதுவும் பேசாமலயே இருக்கீங்களே ?
டாக்டர் : ஆபரேசன் செஞ்சா பேயா அலைவாரு பரவாலயா?
ஒருவர் : ?????????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : டாக்டர்! டாக்டர்! வேகமாக ஓடினால் மூச்சிரைக்குது.
டாக்டர் : மெதுவா ஓடுங்களேன்.
ஒருவர் : பிக்பாக்கெட் அடிச்சிட்டு எப்படி மெதுவா ஓடுறது?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : ஏன் டாக்டர் வயிற்றில் ஆபரேஷன் பண்ணிட்டு தண்ணிக் குடிக்கச் சொல்றீங்க?
டாக்டர் : எங்காவது லீக் ஆகுதானு பார்க்கத்தான்..!
நோயாளி : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பெண் : டாக்டர்.. என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
டாக்டர் : உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிசம் லேட்டா வந்திருந்தா உயிரோட பார்க்க முடியாது.
பெண் : பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?
டாக்டர் : ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
ஒருவர் : ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
டாக்டர் : ?????????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : ஒரு மாசமா என்னால வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் தான் எனக்கு கல்யாணம் ஆச்சு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்தா பிழைக்க மாட்டாருனு சொல்கிறார்களே..?
டாக்டர் : எந்த மடையன் சொன்னான்..? முப்பது வருசமா ஆபரேஷன் செய்துதானே நான் பொழைச்சிட்டு வரேன்..?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : எங்க ஆ காட்டுங்க!
நோயாளி : அந்த ஜன்னல் வழியா பாருங்க... செவுத்துல எழுதியிருக்கு.
டாக்டர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர் என்னால எந்த வீட்டு வேலையும் செய்ய முடியலை. என்ன காரணம்னு சொல்லுங்க.
டாக்டர் : எல்லாம் பரிசோதித்து விட்டேன். கடைசியா தான் தெரிஞ்சது.. நீங்க ஒரு சோம்பேறின்னு...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி : நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?
டாக்டர் : அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில் இருந்து நான் பிழைச்சிடுவேன்.
நோயாளி : ?????????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : அந்த டாக்டர் ஏன் டெய்லர் கழுத்த புடுச்சி வெளில தள்றாரு?
மற்றொருவர் : இந்த மருத்துவமனையில டாக்டர் பண்ற எல்லா ஆபரேஷனுக்கும் தான் தையல் போடணும்னு கேட்டாராம்.
ஒருவர் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : காலிலே பாம்பு கடிச்சி 5 நிமிஷம் கூட ஆகலையே எப்படி செத்தாரு.
நோயாளியின் உறவினர் : விசம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம் டாக்டர்.
டாக்டர் : ???????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : என் பொண்டாட்டி தொல்லை தாங்கமுடியல. ஏதாவது ட்ரீட்மெண்ட் பண்ண முடியுமா?
டாக்டர் : அது தெரிஞ்சா நான் ஏன் 24 மணிநேரம் ஹாஸ்பிட்டல் வைச்சுருக்கேன்!
நோயாளி : ????????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : கஷ்டமா இருக்கு டாக்டர்.
டாக்டர் : எதுக்கு?
நோயாளி : நர்ஸ்ஸை சிஸ்டர்னு கூப்பிடறது....
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : நான் எழுதிக் கொடுத்த மருந்துல ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?
நோயாளி : ஓ... இருக்கே போன தடவை 25 ரூபால இருந்தது. இப்ப 40 ரூபா ஆகி இருக்கு.
டாக்டர் : ????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : தண்ணியை காய்ச்சி வடிகட்டி குடிக்க சொன்னேனே செஞ்சியா ?
நோயாளி : அப்படி செஞ்சதுக்கு தான் போலீஸ்ல புடிச்சிட்டு போயிட்டாங்க டாக்டர்!
டாக்டர் : ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர் ! இந்த ஆபரேஷனுக்காக நான் நிறைய பேர்கிட்டே கடன் வாங்கி இருக்கேன்...
டாக்டர் : கவலைப்படாதீங்க ஆபரேஷனுக்கு அப்புறம் எந்த கடன்காரனும் உங்களைத் தேடி வரமாட்டாங்க !
நோயாளி : ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர் ! நீங்க எனக்காக ஒரு காரியம் பண்ணணும் !
டாக்டர் : சாரி ! நான் ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவேன், காரியம் எல்லாம் பண்ணமாட்டேன் !
நோயாளி : ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அமுதா : டாக்டர், பையன் லட்டை முழுங்கிட்டான். ஆபரேஷன் பண்ணியாவது வெளியில எடுத்திடுங்க.
டாக்டர் : லட்டுக்கு ஏன் பயப்படறீங்க?
அமுதா : ஐயோ அது வேட்பாளர் தந்த லட்டு உள்ளே தங்க மோதிரம் வெச்சிருக்காறாம்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : உங்களுக்கு வந்திருப்பது நிமோனியா.
நோயாளி : சரியாகச் சொல்லுங்கள் டாக்டர். இப்படித்தான் என் சிநேகிதிக்கு ஒரு டாக்டர் நிமோனியா என்றார். ஆனால், அவள் டை பாய்டால் இறந்துவிட்டாள்.
டாக்டர் : கவலைப்படாதீர்கள். ஒரு நோயாளிக்கு நிமோனியா என்றால் அவர் நிமோனியாவால் தான் இறப்பார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : நான் என்னுடைய கையுறையை உள்ளே வைத்துத் தைத்துவிட்டேன். இன்னுமொரு ஆபரேஷன் செய்ய வேண்டும்.
நோயாளி : அந்தக் கையுறைக்கான காசைக் கொடுத்துவிடுகிறேன். இன்னுமொரு ஆபரேஷன் வேண்டாமே.
டாக்டர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர் மூச்சுவிட்டால் நெஞ்சு வலிக்கிறது.
டாக்டர் : ஒரே மாத்திரையில் இரண்டையும் நிறுத்திவிடுகிறேன். கவலைப்படாதீங்க.
நோயாளி : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : பரவாலையே! மருமக உங்கமேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறாங்களே!
மாமியார் : எல்லா வேஷம் டாக்டர், உங்ககிட்ட சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வந்ததில் இருந்தே தெரியலையா.
டாக்டர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : உங்க மாமியாருக்கு இந்த மருந்துகளை 1 மாதம் தினமும் தரணும், நிறுத்தினால் மரணம் நிச்சயம்..
மருமகள் : அப்படியானால் 1 தினத்திற்கு மட்டும் மாத்திரை வாங்கினா போதுமா டாக்டர்...
டாக்டர் : ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : டாக்டர் என்னை ஞாபகம் இருக்கா ?
டாக்டர் : என்ன ! இப்படி கேட்டுட்டிங்க ஆபரேஷனுக்கு இடையில் அய்யோ....அம்மா ! என்னை காப்பாத்துங்கன்னு சொல்லி தப்பிச்சு உயிர் பிழைச்சு போயீட்டிங்களே. மறக்க முடியுமா..?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் : டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல கிளீனிக் வெச்சுருக்க டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!
டாக்டர் : அடப்பாவி! என்னைவிட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே! போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.
நர்ஸ் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : எதுக்கு டாக்டர் ஒரு Simple ஆபரேஷனுக்குப் போய் அந்த டாக்டர், இந்த டாக்டர்னு நிறைய பேரை கூப்படறீங்க?
டாக்டர் : எனக்கு ஆபரேஷன் ரூமுக்குள்ள தனியா போகவே ரொம்ப பயம். அதுக்குத்தான் இவ்ளோ பேரைக் கூட்டிக்கிறேன்.
நோயாளி : ??????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பெண் : டாக்டர் சார், ரொம்ப நன்றி, உங்க டிரீட் மெண்டால எனக்கு நல்ல பலன் கிடைச்சது.
டாக்டர் : யாரு நீங்க, உங்களுக்கு நான், இதுவரை எந்த டிரீட் மெண்டும் பண்ணதில்லயே.
பெண் : எங்க மாமியாருக்கு பண்ணியிருக்கீங்களே !
டாக்டர் : ??????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : டாக்டர் என் இருதய ஆபரேஷனுக்கு சுத்தியலை ஏன் கொண்டு வந்திருக்கீங்க...
டாக்டர் : உங்களுக்கு கல் நெஞ்சுன்னு சொன்னாங்களே...
நோயாளி : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க.
நோயாளி : அது கிடைக்கலேன்னா முட்டை கோஸ் சாப்பிடலாமா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment