Monday, 23 July 2018

காமெடி

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர்: உங்களை யாருன்னே எனக்கு தெரியாது, என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே, ஏன் ?

மற்றவர்: தெரிஞ்சவங்க கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் என்கிறார்களே !

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்.....!!!

கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பைய‌ன் : உங்க‌ குடும்ப‌ ந‌ன்மையை உத்தேசித்து இந்த‌ கேள்வி?

பெண் : கேழுப்பா

பைய‌ன் : எப்ப‌ நீங்க‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ப் போரீங்க‌?

பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க‌ நீ யாரு

பைய‌ன் : உங்க‌ த‌ங்க‌ச்சியோட‌ ல‌வ்வ‌ர்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நவின்: ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டுவந்திருக்காங்க...?

கவின்: இன்னைக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொன்னதை தப்பாப்புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.

மற்றவர்: அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?

ஒருவர்: இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: ஏங்க மதுரைக்கு துரு பஸ் இருக்கா?

மற்றவர்: இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!

ஒருவர்: ?????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் ..

பாக்கி : ஏன்?

வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் ...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சாமினி: என்னடி சொல்றே உங்க வீட்டுல தங்கத்திலேயே குழம்பு வைக்கிறீங்களா?

சாலினி: ஆமாண்டி 24 கேரட் போட்டு குழம்பு வைகிறோமே!

சாமினி:????

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?

மற்றவர்: புருசன் சமையல் பண்ணக் கத்துக்கிறான், பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.

மற்றவர்: அப்படியா! எங்க வேலை பாக்குறீங்க?

ஒருவர்: கசாப்புக் கடையில!!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: என்ன இது... ஷீட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா?

மற்றவர்: அவங்கல்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க... ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறங்க...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பார்த்திபன்: என்ன காலையில குறங்கு கூட வாக்கிங்கா?

வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை நாய்

பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்

வடிவேலு: அப்ப சரி

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

மற்றவர்: ஏன்?

ஒருவர்: கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே..?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு..வேலையை விட்டு தூக்கிட்டாங்க!

மற்றொருவர்: ஏன்?

ஒருவர்: அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: கூட்ட நெரிசல் தாங்காமல் ஓடற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துட்டாராம்!

மற்றவர்: அடப்பாவமே.. யாரு சார் அது? படிக்கட்டில் நின்னுகிட்டு இருந்தவரா..

ஒருவர்: இல்லை. பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப் போனவராம்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தானேஷ்: என்னடா இவனோட கழுத்தறுப்பா போச்சே

சுரேஷ்: ஏன்டா என்னடா சொல்றான்

தானேஷ்: சாமிக்கு மொட்டை அடிக்கிறதா 8 முறை வேண்டிக்கிட்டனாம். 8 மொட்டையையும் ஒரே சமயத்தில் அடிச்சிட சொல்லி அடம்புடிக்கிறான்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர் : நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு

மற்றொருவர் : லாட்டரி ஏதாவது விழுந்ததா ?

ஒருவர் : நீங்க வேற நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும், எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா என் கன்னம் வீங்கிப் போச்சு

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ரமனன் : சார், உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் வீட்டுக்கு வரலாமா?

முராரி : ஐயய்யோ, வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க ஆபீசுக்கே வந்துடுங்க ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கமலா : என்னது, உன் வீட்டுக்காரர் கடிகாரத்தைப் பார்த்துக்கிட்டே சாப்பிடறாரு?

விமலா : டாக்டர்தான் அவரை டைம் பார்த்து சாப்பிடச் சொல்லியிருக்காரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர் : ஏன் சார் படிக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கிறீங்க?

மற்றவர் : சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுட்டே இருக்கான்!!

ஒருவர் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வரவேற்பாளர் : வாங்க..வாங்க.. நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா?பொண்ணு வீட்டுக்காரரா?

கண்ணன் : இல்லைங்க நான் பொண்னோட பழைய வீட்டுக்காரருங்க.

வரவேற்பாளர் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

லேடி : நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!

பிச்சைக்காரர் : ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.

லேடி : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர் : நீங்க கட்சியிலிருந்து விலகிட்டா, உங்க கட்சியோட பலம் பாதியாயிடும்னு எப்படிச் சொல்றீங்க ?

கட்சிக்காரர் : எங்க கட்சியில இருக்கிறதே, என்னையும் சேர்த்து ரெண்டு பேர்தான்!

ஒருவர் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

குமார் : உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது.

பக்கத்து வீட்டுக்காரர் : அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள் ?

குமார் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ராமு : அது என்ன டெய்லியும் பெப்சி பாட்டில்ல தண்ணி ஊத்துங்கன்னு பிச்சை எடுக்கும்போது சொல்லிட்டுப் போற ?

பிச்சைக்காரன் : நான்தான் அதிக தெருவுல பிச்சை எடுக்கறேன்னு பெப்சி கம்பெனி என்னை பிராண்ட் அம்பாசடரா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க சாமி !

ராமு : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சுரேஷ் : உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்களே.. எதவச்சி சொன்னீங்க?

ஜோதிடர் : நீ காதலிக்கிற பொண்ணு என் மக தானே.. அத வச்சுத்தான்.

சுரேஷ் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஊர்காரன் : அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இல்லையே!

வழியில் சென்றவர் : நான் ராமு இல்லைங்க.. கோபி.

ஊர்காரன் : அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையும் மாத்திட்டியா?

வழியில் சென்றவர் : 😀😀

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கந்தன் : செ‌க்கு மா‌தி‌ரி உழை‌க்கற பொ‌ண்ணா இரு‌க்கணு‌ம்னு பா‌த்து க‌ட்டினது த‌ப்பா போ‌ச்சு.

பக்கத்து வீட்டுகாரர் : ஏ‌ன்..!! என்ன ஆச்சு..

கந்தன் : இ‌ப்போ எ‌ன் பைய‌ன் செ‌க்கு மாடா அவளை சு‌த்‌தி சு‌த்‌தி வ‌ர்றா‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சோமு : சார் நீங்க எவ்வளவு ஃபீஸ் வாங்குறீங்க?

ஜோ‌சிய‌ர் : மூணு கேள்விக்கு ஆயிரம் ரூபாய்.

சோமு : ரொம்ப அதிகமா இருக்கே?

ஜோ‌சிய‌ர் : ஆமா‌ம். ச‌ரி உன்னோட மூணாவது கேள்வியும் ‌சீ‌க்‌கிர‌ம் கேட்டுரு.

சோமு : 😟 😟

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சாவு வீட்டில்: பத்து பேர் சேர்ந்து புகைப்படக்காரரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழியில் சென்றவர்: ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க? என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

சாவு வீட்டில் ஒருவர்: பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ‌ஸ்மைல் ப்ளீ‌‌‌ஸ் என்றால் என்ன செய்வார்களாம்?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ரா‌ணி : மன்னர் ஏன் படுக்கை அறையை விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்?

சேவக‌ன் : எ‌ன் ‌பி‌ன்னா‌ல் போ‌ர்வை வரு‌கிறது ம‌ன்னா எ‌ன்று தா‌ன் சொ‌ன்னே‌ன். அதை‌க் கே‌ட்டு‌த்தா‌ன் ஓடு‌கிறா‌ர் எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை மகாரா‌ணி அவ‌ர்களே...

ரா‌‌ணி : ‌நீ போ‌ர்வை எ‌ன்று சொ‌‌ன்னது அவர் காதில் போர் என்று விழுந்திருக்கும். அதா‌ன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மாப்பிள்ளை: ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?

பெண் வீட்டுக்காரங்க: பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மேனேஜரிடம், என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்! என்று பதட்டத்துடன் சொன்னார்.

மேனேஜர்: அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

வந்தவர்: ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மகன் வீட்டார்: நாங்கதான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டோமோ பையன் ரொம்ப சிக்கனம்னு .. ..

மகள் வீட்டார்: இருக்கலாம் அதுக்காக ஹனிமூனுக்குகூட பெண்ணை விட்டுட்டு தனியாப் போறேன்னு செல்றது நல்லாயில்லே

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

விடு‌தி உ‌ரிமையாள‌ர்: ஒரு நைட்டுக்கு 200 ரூபா வாடகை. ஆனா நீங்களே படுக்கை செஞ்சு‌க்கற பட்சத்துல 100 ரூபா‌ய்தா‌ன்.

வ‌ந்தவ‌ர்: சரி நானே படுக்கை செஞ்சுக்கறேன்

‌விடு‌தி உ‌ரிமையாள‌ர்: அப்ப படு‌க்கை‌க்கு தேவையான பொரு‌ள் எ‌ல்லா‌ம் 300 ரூபா‌ய். எ‌ங்க‌கி‌ட்ட‌ வா‌ங்‌கி‌த்தா‌ன் ஆகணு‌ம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவ‌ர்: இந்த ஏரியாவுல இரு‌க்‌குற ‌வீ‌‌ட்டுல தண்ணி பஞ்சமே வராது‌ன்னு தரக‌ர் சொ‌ன்னத ந‌ம்‌பி ஏமா‌ந்து‌ட்டே‌ன்.

ம‌ற்றவ‌ர்: எ‌ப்படி?

ஒருவ‌ர்: அ‌ந்த ‌வீடு க‌ட்டி‌யிரு‌க்‌கிறதே ஏ‌ரிலதா‌னே.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒருவன் இறந்து போனான். துக்கம் கேட்க போனார் சஞ்சய் சிங் அப்பொழுது,

சஞ்சய் சிங்: அழுது கொண்டிருந்த இரட்டையர்களில் ஒருவனிடம் போய், இறந்தது நீயா உன் சகோதரனா? என்றார்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பூரணி: எல்லா கல்யாணத்துக்கும் போயிப்போய் உங்க அப்பாவுக்கு பைத்தியமே பிடிச்சிடிச்சின்னு நினைக்கிறேன்.

தாரணி: எப்படி சொல்றீங்க?

பூரணி: வெயில் அடிக்கும்போதே மழையும் பெ‌ய்தா‌ல் காக்காக்கும், குருவிக்கும் கல்யாணம்னு சொன்னேன். உடனே எந்த ம‌ண்டப‌த்துலன்னு கேட்டு ‌கிள‌ம்ப ரெடியாகுறா‌‌ர்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வீட்டுக்காரர்: எனக்கு முன்னால வேஷ்டிய மடிச்சுக்கட்டற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருசசா?

வேலைக்காரன்: மடிச்சுக்கட்டல ஐயா, நீங்க எடுத்துக்கொடுத்த வேஷ்டி தண்ணில போட்டதும் இப்படி சுருங்கிடுச்சு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர்: யாருய்யா இது கிளினிக்குக்கு உள்ள ஜட்டியோட நுழையறது?

கிளினிக் வருபவர்: டாக்டர் நீங்க நல்லா ட்ரஸ்ஸிங் செய்வீங்களாமே. என‌க்கு இ‌ன்னை‌‌க்கு க‌ல்யாண‌ம்... அதா‌ன்...

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பூஜா: அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?

ராஜா: அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

ஒருவர்: மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஜக்கு: ஞாபக மறதி போட்டில கலந்துகிட்டு, என்ன சொன்னாருன்னு முதல் பரிசு கொடுத்திருக்காங்க?

மக்கு: என்ன போட்டி இதுன்னு கேட்டாராம்..!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சிந்து: தெரியாத்தனமா, பூசணிக்காய் வியாபாரம் செய்யறவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிட்டேன்.

இந்து: சமையல்ல பூசணிக்காயா?

சிந்து: அதில்ல. தாம்பூலப் பையில் ஆளுக்கொரு பூசணிக்காய்.. .தூக்கிட்டு வந்ததில் ரெண்டு கையும் செம வலி

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: அந்த பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்கலாம்..

மற்றொருவர்: அதுக்காக குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக் காட்டுறது கொஞ்சங்கூட நல்லாயில்ல!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஆப்பிள் அழுது கொண்டு இருந்தது. அதற்கு,

வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

சிலந்தி 1: ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது?

சிலந்தி 2: அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

பூனை: உன் வயசு என்ன?

யானை: பத்து வயசு பூனை. ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே

யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்

பூனை: எனக்கு 15 வயசு யானை. ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே

பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

வந்தவர்: சார் நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா?

ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே தண்டவாளத்தில வந்தா போதும்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: இது கவர்ச்சி நடிகை ஆரம்பிச்சிருக்கிற ஓட்டலா?

மற்றொருவர்: எப்படி கண்டுபிடிச்சே?

ஒருவர்: ஜட்டிநாடு ஓட்டல்னு போட்டிருக்காங்களே!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: அந்த டைரக்டர் இதுக்கு முன்னால பஸ் கண்டக்டரா இருந்திருப்பார் போலருக்கு?

மற்றொருவர்: எப்படி சொல்றே?

ஒருவர்: கட், கட்னு சொல்லாம ஸ்டாப், ஸ்டாப்-ங்கறாரே.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் பேசியது தப்பா போச்சு?

மற்றொருவர்: ஏன்? என்னாச்சு?

ஒருவர்: எங்க வீட்டு வேலைக்காரி என்னைத் தப்பா நினைச்சுட்டா.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: குருவே, சித்தியை அடைய ஒரு வழி சொல்லுங்கள் குருவே?

குரு: சித்தாப்பாவுக்கே துரோகம் செய்ய நினைக்கிறாயே, நீ உருப்படுவியா?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: Tendulkar-உடைய தம்பி பேர் என்ன?

மற்றொருவர்: Ninedulkar.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணீங்க?

வக்கீல்: கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவன்: வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?

மற்றொருவன்: ஆமாம்! இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..அதான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது?

மற்றொருவர்: Sri Lanka.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

ஒருவர்: America-வுக்கு opposite என்ன?

மற்றொருவர்: Ameri-பழம்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

No comments:

Post a Comment