Monday, 23 July 2018

அரசியல் ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தொண்டன் 1: நம்ம தலைவரைப் போய் இலங்கை பிரச்சனை பத்தி பேசச் சொன்னது பெரிய தப்பாப்போச்சு!

தொண்டன் 2: ஏன் என்ன பேசினாரு?

தொண்டன் 1: நான் இலங்கையை எச்சரிக்கிறேன்! என் தலைவன் ஜெயசூரியாவை ஏன் அணியிலிருந்து நீக்கினீர்கள்? தம்பி ரணதுங்காவிற்கு கல்தா கொடுத்ததற்கு இலங்கை என்றாவது ஒரு நாள் பதில் கூறியே ஆகவேண்டும்-னு உளறிக் கொட்டிட்டாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தலைவர்: தொகுதி மக்கள் இப்படிக் கேப்பாங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலை

தொண்டன்: என்ன கேட்டாங்க ?

தலைவர்: இத்தினி வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை .. .. எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்கப் போறீங்கன்னு கேட்கறங்க

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தலைவர்: நான் ஜெயிப்பேன்னு கனவுல கூட நினைக்கல்ல!

தொண்டர்: இப்ப மட்டும் என்ன நீங்க இன்னும் ஜெயிக்கல்ல நீங்க கண்டது கனவுதான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தொண்டர்: நீங்க தேர்தல்ல நிக்கிற தொகுதியிலே மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போறாங்களாமே?

தலைவன்: ஆமா! எனக்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை. ஒரு நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னேன். அதான் விதி விளையாடி விட்டது

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கட்சித்தலைவர்: கோரிக்கை என்னன்னு சொல்லாம வீட்டு வாசல்ல வந்து ஆர்பாட்டம் பண்ணினா என்ன அர்த்தம்?

தொண்டர்கள்: கோரிக்கை என்னங்கறதே நீங்கதான் தலைவா சொல்லணும்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தொண்டன் 1: தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்

தொண்டன் 2: என்னவாம்?

தொண்டன் 1: எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தொண்டன் 1: தலைவருக்கு எத்தனை மனைவி?

தொண்டன் 2: சட்டப்படி ஒண்ணு, செட்டப்படி ஏழு

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தொண்டன் 1: அமைச்சர் முடிவெட்டப் போறப்போ எதுக்கு ஆறுபேரைக் கூட்டிகிட்டுப் போறார்?

தொண்டன் 1: சலூன்ல போர்வை போத்தறப்போ கைதட்டத்தான்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

தொண்டன்: தலைவரே, உங்க பங்களா, ஃபேக்டரிக்கு, சினிமா தியேட்டர் இது எல்லாத்துக்கும் மக்கள் அன்புனு பேர் வச்சிருக்கீங்களே ஏன்?

தலைவர்: என்னோட அரசியல் வாழ்வுல மக்கள் அன்பைத் தவிர எதுவும் சம்பாதிக்கலைனு சொல்லிக்கலாமே?

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

No comments:

Post a Comment