Monday, 23 July 2018

முதியவர் ஜோக்ஸ்

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

முதியவர் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார் . முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

தாத்தா: நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம். நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வரவேனாம்... பாப்பா நடந்து வருவியாம்.

பேத்தி: வேண்டாம் தாத்தா.. என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேண்டாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்..

தாத்தா: ???

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மாமனார் : என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க....... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டா இருந்தீங்க?

மாப்பிள்ளை : ஆமா..!! அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ இந்தச் சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு......!

மாமனார் : 😧 😧

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மாமியார் : என்னை உனக்கு பிடிக்கலேன்னு சொ‌ல்‌றியே அ‌ப்போ என் போட்டோவை ஏன் சமையல் அறைல மாட்டியிருக்க?

மருமகள் : சமையல் அறைல ஸ்டவ் இருக்கு, குழந்தைங்க அந்தப் பக்கம் வரக்கூடாதுன்னுதான்.

மாமியார் : 😟 😟

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மருமகள் : உங்களைப் பார்த்த உடனேதான் அத்தை எனக்கு வாழ்க்கை மேலேயே ஒரு நம்பிக்கை வந்துச்சு!

மாமியார் : அ‌ப்படியா?

மருமகள் : ‌நீ‌ங்களே உ‌யி‌ர் வாழு‌ம் போது நா‌ன் வாழ‌க் கூடாதா?

மாமியார் : 😟 😟

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மாமனார் : மா‌ப்‌பி‌ள்ளை பேரு‌ந்து ஓ‌ட்டுநரா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படியா?

உறவினர் : ஏ‌ன் அ‌ப்படி எ‌ன்ன செ‌ஞ்சு‌‌ட்டா‌ர்?

மாமனார் : புரோ‌கித‌ர் ம‌ந்‌திர‌ம் சொ‌ல்‌லி தா‌லிக‌ட்ட சொ‌ன்னா ம‌ட்டு‌ம் போதாதா‌ம். வா‌யி‌ல் ‌வி‌சி‌ல் வ‌ச்‌சி ஊ‌தினா‌த்தா‌ன் தா‌லி க‌ட்டுவே‌ன்னு அட‌ம் ‌பிடி‌க்‌கிறா‌ர்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மாமியார்: ரொம்ப அழகுன்னு நினைச்சுட்டு கர்வப் படாதே. உன் வயசுல நான் உன்னை விட அழகா இருந்தேன்.

மருமகள்: ஆனா நான் உங்க வயசுல உங்கள மாதிரி இ‌வ்ளோ அசிங்கமா இருக்க மாட்டேன்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மருமகள்: டாக்டர் என்னோட நாய் வாலை கட் பண்ணிடுங்க.

டாக்டர்: ஏன் திடீர்னு?

மருமகள்: என் மாமியார் நாளைக்கு ஊர்லேந்து வர்றாங்க. வீட்லேந்து ஒரு துரும்புகூட அவங்களை வரவேற்கக் கூடாதுன்னுதான்.

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

மாமியார்: நான் இப்பவும் நல்லா இருக்கேன்னு என் ஃபிரண்டு கோமளா சொல்றா. ஆனா கோரமா இருக்கேன்னு உன் மாமனார் சொல்றார்.

மருமகள் : 2 பேர் சொன்னதும் சரிதானே அத்தை . .

மாமியார் : எப்படி?

மருமகள் : நல்லா கோரமா இருக்கீங்க!

😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

No comments:

Post a Comment