😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : சசி ஒரு கப் காப்பி...!
மனைவி : என்னது.....?
கணவன் : உனக்கு காப்பி தரட்டுமானு கேட்டேன்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: ஏன் இப்படி பேயடிச்சமாதிரி இருக்கிறீங்க?
கணவன்: கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே அடித்தாய்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவாயில்லீங்க
கணவர்: எப்படி சொல்ற?
மனைவி: பாருங்க!குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?
கணவர்: நாசமா போச்சு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்... கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க..!
கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி...!
மனைவி : ???
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: வாழ்க்கையில நாம தப்பு பண்ணிட்டா.... கண்ண மூடி பத்து நிமிஷம் யோசிக்கணும்.......
மனைவி: ஏன்?
கணவன்: அப்பத்தான், யார் மேல பழியப் போடலாம்னு மனசு சொல்லும்!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : உங்ககிட்ட தாலி கட்டிண்டு இந்த 8 வருஷத்துல என்னாத்தக் கண்டேன்?
கணவன் : நீ என்னாத்தக்கண்டயோ இல்லியோ, நான் முழு எமகண்டம்,7-1/2 சனில்லாம் பாத்தாச்சு!!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி: ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?
மனைவி : நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி... ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன் : ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?
கணவன் : வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!
மனைவி : ???
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க ?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : நான் பொங்கல் வெச்சதும் எங்கே கிளம்பிட்டீங்க..?
கணவன் : போய் கலெக்டர்கிட்ட நம்ம வீட்டை வெல்லம் (வெள்ளம்) பாதித்த பகுதியா அறிவிக்கணும்-னு ஒரு மனு தந்துட்டு வந்துடறேன்..!
மனைவி : ??????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நம்ம மாட்டுக்கு என் கையால நானே பொங்கல் பண்ணி ஊட்டி விடணும்ங்க ?
கணவன் : நமக்கு நல்லது செய்யற வாயில்லா ஜீவனுக்கு நீ செய்யற பதில் நன்றி இதுதானா ?
மனைவி : ???????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?
கணவன்: நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.
மனைவி: ?????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க ?
கணவன் : ஏன் உனக்கு சொல்லணும் ?
மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவாங்க??
கணவன்: Unmarried-னு சொல்லுவாங்க...
மனைவி: யோவ் நில்லுய்யா ஓடாத!!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..
கணவன்: அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.. பத்திரமா இருக்கும்..
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க??
கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்..
மனைவி: ?????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க....
கணவன் : நீ என்ன சொன்னே?
மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு, வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்-னு சொன்னேங்க.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .
கணவன்: வேற என்னதான் போட்ட?
மனைவி: பேசாம பட்டிணி போட்டேன்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு
கணவன்: எப்படி சொல்ற?
மனைவி: சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?
கணவன் : ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை !!!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : ஒரு மணி நேரமா ரூம்ல எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்களே. பேசாமல் கண்ணாடியை போட்டுட்டு தேட வேண்டியது தானே?
கணவன் : அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
மனைவி : ????????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க.
கணவன் : அவரை எதுக்கு கேட்கணும் ?
மனைவி : டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும் தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : நேத்து மூக்குப்பிடிக்க சாப்பிட்டிங்களே, அதே சாம்பார்தான் இன்னிக்கும்.
கணவன் : சரி, இன்னிக்கு மூக்கைப் பிடிச்சுட்டு சாப்பிடறேன்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : என்னங்க... திருடன் பாட்டுக்கு நம்ம வீட்ல புகுந்து திருடிட்டிருக்கான், நீங்க ஏதோ எழுதிட்டிருக்கீங்க?
கணவன் : சும்மா இருடி... நாளைக்கு போலீஸ் வந்து என்னென்ன பொருள் காணாமப் போச்சுன்னு கேட்டா, கரெக்டா சொல்ல வேணாமா.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே !
மனைவி : ??????????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடியே உங்க அம்மாவை வரச் சொல்லுங்க.
கணவன் : எதுக்குடி ?
மனைவி : நம்ப வீட்டு வேலைக்காரி லீவு எடுத்துட்டு ஊருக்குப் போறாளாம்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : கணவன் மனைவி சண்டைனா நாலு சுவத்துக்குள்ளாத்தான் இருக்கனும்.. சரியா
கணவன் : அப்ப, தப்பிச்சு ஓடக்கூட எனக்கு உரிமையில்லாயா..
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : ஏங்க, நம்ம பையனுக்கு உடனே ஒரு நல்ல பொண்ணா பாருங்க. அவனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு
கணவன் : எப்படிச் சொல்ற?
மனைவி : அவனோட ரூம்ல போய் பாருங்க.. சமையல் செய்வது எப்படினு புத்தகமா வாங்கி அடுக்கியிருக்கான்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : பின்னாடி Figure இருந்தா கண்ணுக்கூட தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான்.. நீங்க சிரிக்கிறீங்க?
கணவன் : உன்னை பொய் figure-ன்னு சொல்றான், அவனுக்கு தான் கண்ணு தெரியல.. அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்..
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பிச்சைக்காரன் : மேடம், பாக்க நீங்க சமந்தா மாதிரியே இருக்கீங்க.
மனைவி : இந்த குருடனுக்கு 10 ரூபா கொடுங்க, ப்ளீஸ்..!
கணவன்: 100 ரூபாயா கொடுடீ... சத்தியமா இவன் குருடன்தான் !
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : என்னங்க நீங்க புதிய 2000 ரூபாய் நோட்டு மாரிங்க.
கணவன் : நா அவ்வளவு மதிப்புள்ளவனாடி செல்லம்..
மனைவி : நீங்க வேற மாத்தவும் முடியல, தூக்கி எறியவும் முடியல.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : ராத்திரி திருடன் வந்து என்னை மிரட்டினப்ப நீங்க ஏன் வாயே திறக்கலை?
கணவன் : உன்னையே அந்த மிரட்டல் மிரட்டினானே... அவன் எவ்ளோ பெரிய வீரனா இருப்பான்னு நினைச்சு பயந்துட்டேன்.
மனைவி : ?????????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே.... அதைச் சொல்ல நீங்க யாரு?
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்னு சொல்றீயா?
மனைவி : இல்ல, நான் தான் சொல்லுவேன் இனிமே வராதேன்னு.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : மனிதனைப் போலவே கரடி குறட்டை விடும்னு, ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சு இருக்காங்களாமே ?
மனைவி : இதுக்கு ஏன் ஆராய்ச்சி பண்ணனும் ? நீங்க தூங்கறதைப் பார்த்த அப்படித்தானே இருக்கு ?
கணவன் : ????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : காலெண்டர்-ல அப்படி என்னடி பாக்குற?
மனைவி : பல்லி விழும் பலன் பாக்குறேங்க !
கணவன் : அது சரி பல்லி எங்க விழுந்துச்சு?
மனைவி : நீங்க சாப்புடுற சாம்பார்ல தான்...
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?
கணவன் : ஏய்.. என்ன உளர்ற? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பெண் கோலத்துல இருந்தே..?
மனைவி : ???????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா ?
மனைவி : ஆமாங்க ஏன் கேட்கிறீங்க ?
கணவன் : அதுவா, தெரு ஓரத்தில் ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது. அதான் கேட்டேன்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல...
டாக்டர் : அவரைப் பகல் வேளையில கொஞ்சம் பேசவிடுங்க.
மனைவி : ????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : காலையில காப்பி குடிக்கறதை ஏன் நிறுத்திட்டீங்க?
கணவன் : காப்பி குடிச்சுட்டு ஆபிஸ் போனா தூக்கம் வரமாட்டேங்கறது.
மனைவி : ????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு என்ன புண்ணியம்! நம்ம பையனுக்கு ஸ்ரீராமஜெயம் கூட சரியா எழுதத் தெரியல. ரமாஜெயம்-னு எழுதறான்.
கணவன்: அவன் சரியாத்தாண்டி எழுதறான். அது பக்கத்து வீட்டுப் பொண்ணு பேரு.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோங்க.
கணவன்: சரி அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி: எதுக்குங்க..
கணவன்: பிச்சை எடுக்க தான்..
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : என்னங்க இது கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க.
கணவன்: நான்தான் அப்பவே சொன்னேனே. பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : நேத்திக்கு ஒரு படம் பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு பாதி உயிர் போயிடுச்சு.
கணவன் : அப்படியா? எனக்காக இன்னும் ஒரே ஒரு தடவை அந்தப் படத்தை போய் பாரேன் ப்ளீஸ்.
மனைவி : ???????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : எதிர்த்த வீட்டுக்காரர் அவரோட மனைவிக்கு தினமும் ஒரு புடவை வாங்கித் தரார். நீங்களும் இருக்கீங்களே !!
கணவன் : எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்னு ஆசைதான். ஆனா அவங்க வாங்கிக்குவாங்களோ, மாட்டாங்களோன்னுதான் பயமாயிருக்கு...
மனைவி : ?????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?
கணவன் : ஏன், அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?
மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.
கணவன் : ???????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?
மனைவி : உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?
கணவன் : ?????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?
மனைவி : நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..
கணவன்: ????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவர் : டாக்டர்... என் பொண்டாட்டி அவசரத்துல பெப்சின்னு நினைச்சிட்டு பெப்சி பாட்டில்ல இருந்த பெட்ரோல குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர் ?
டாக்டர் : ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போயிடும்..
கணவர் : ???
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்-னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.
கணவர்: அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.
மனைவி: ????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: அன்பே.. இன்று நமது கல்யாண நாள். எப்படி கொண்டாடுவது?
கணவன்: 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்..
மனைவி: ??????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே.. என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்...
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல
மனைவி: தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா?
மனைவி: இல்லே.... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் சாப்பிட்டுகிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் சாப்பிட்டாரு அதான்....
கணவன்: ???????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?
மனைவி: எனக்கு கரடி பாசை புரியலேன்னு அர்த்தம்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு?
மனைவி : ஏங்க?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?
மனைவி: நீங்க தானே சொன்னீங்க! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே ?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : லதா... எதுக்கு நீ வெள்ளிக்கிழமை மட்டும் ரொம்ப ருசியா சமைக்கிற?
மனைவி : அன்னைக்கு தானே உங்கம்மா சாப்பிடாம விரதம் இருக்காங்க!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே.. கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா ?
கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன் ?
மனைவி : ?????????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது ?
மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க !
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.
மனைவி : ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க ?
கணவன் : பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடுன்னு திருடன் கரெக்ட கேட்டானே.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : தொப்புன்னு சத்தம் கேட்டுதே... கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா !
மனைவி : முடியாது ! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது !
கணவன் : ????????????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க.
மனைவி : எதுக்காம் ?
கணவன் : நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் சங்கு சக்கரம் சுத்தமாட்டேங்குது !
மனைவி : முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு !
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : நீ தான் எனக்கு மனைவியா வருவன்னு எங்க ஸ்கூல் மிஸ் அப்பவே சொன்னங்க.
மனைவி : எப்படி சொன்னாங்க..
கணவன் : பண்ணி மேய்க்க தான் நீ லாயக்குன்னு சொன்னங்க
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?
மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்-னு வேண்டிகிட்டேன். நீங்க?
கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்-னு வேண்டிகிட்டேன்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : என்னங்க.. உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..
மனைவி : எதுக்கு இவ்ளோ அவசரம்?
கணவன் : உங்க அம்மாவையும், அக்காவையும் என்னாலே தனியா சமாளிக்க முடியல..!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கிருந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்.
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சு அடிச்சேன்.
கணவன் : ?????????????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : 1000 தான் இருந்தாலும் நீ எனக்கு பொண்டாட்டி!!
மனைவி : அப்படினா என்ன நீங்க செல்லாகாசுனு சொல்றீங்களா.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : என்னங்க... நம்மக்கிட்ட தான் மாத்தரதுக்கு 500,1000 நோட்டு இல்லையே அப்புறம் ஏன் பேங்க்கு கிளம்புரிங்க.
கணவன் : நான் கடன் கேட்டப்ப இல்லைனு சொன்ன எத்தன பேரு நோட்ட மாத்த பேங்குல நிக்கிறானு பாத்துட்டு வரத்தான்.
மனைவி : ??????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்?
கணவன் : அது ஒரு இறந்த காலம்....
மனைவி : ???????????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : எங்கடி சட்டைல வெச்சிருந்த 100 ரூபாயக் காணம்.
மனைவி : நீங்க தானே புள்ள பரிச்சைக்குப் போறேன்னதுக்கு 10, 20-ன்னு எடுக்கக்கூடாது, 100 எடுக்கனும்னீங்க
அப்பா : ?????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்-னு சொன்னான், நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறததை.
கணவன் : ?????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : பையன் புல்லாங்குழல் கேட்டான் வாங்கப் போயிட்டு திரும்ப வந்துட்டீங்களே, ஏன்?
கணவன் : முழுவதும் ஓட்டையா இருக்கிறதக் கொடுத்தான் வேணாமுன்னு வந்துட்டேன்.
மனைவி : ??????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : டிவி-ல ஜல்லிக்கட்டு பாக்குறிங்கலே ! அவ்ளோ ஆர்வம்னா நேரில போய் மாட்டை அடக்க வேண்டியது தானே!
கணவன் : கட்டுன மாட்டையே அடக்க முடியல... இதுல கட்டாத மாட்டை எப்படி அடக்குறது??
மனைவி : ???
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி இல்லை?
மனைவி : இப்போதெல்லாம் யாரும் உங்களை கச்சேரி பண்ண கூப்படறதே இல்லயே..அதான்!
மனைவி : ?????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி இல்லை?
மனைவி : இப்போதெல்லாம் யாரும் உங்களை கச்சேரி பண்ண கூப்படறதே இல்லயே..அதான்!
மனைவி : ?????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும் வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க ?
மனைவி: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.. ?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : ஏன்டி நான் வீட்டுக்குள்ள வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கற?
மனைவி : டாக்டர் தான் சொன்னாரு, தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கன்னு
கணவன் : ??????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு என் ஆபிசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : ம்ம்ம்... நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். அதான் நீங்களாவது ஆபிஸ்ல இருக்கீங்களான்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்.
கணவன் : ???????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன் : இன்னுமா சமையல் ஆகலே? நான் ஓட்டலுக்கு போறேன்.
மனைவி: ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ ...
கணவன் : அதுக்குள்ளே ஆகிடுமா ?..
மனைவி : இல்லே, நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.
கணவன் : ?????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவர் : WIFE - க்கு என்ன அர்த்தம் தெரியுமா? - Without Information, Fighting Everytime!
மனைவி: இல்லை டார்லிங் அதற்கு அர்த்தம் With Idiot For Ever
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவர் : இன்னிக்கு சண்டே ! நல்லா என்ஜாய் பண்ணப் போறேன். அதுக்குத்தான் 3 சினிமா டிக்கெட் வாங்கியிருக்கேன் .
மனைவி : எதுக்கு மூணு?
கணவர் : உனக்கும், உன்னோட அப்பா, அம்மாவுக்கும்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கணவன்: கப் போர்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன வாங்கப் போறே?
மனைவி: வேற என்ன, ஸாசர் போர்டுதான்!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி: என்னை பெண் பார்க்க வந்தன்னிக்கு நீங்க டிபனை சாப்பிடவேயில்லையே ஏன்?
கணவன்: ஒரு நாளைக்கு ஒரு ஷாக் போதுமேன்னு நினைச்சேன்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனைவி : டின்னர் வேணுமா?
கணவன் : சாய்ஸ் இருக்கா?
மனைவி : ரெண்டு இருக்கு!
கணவன் : என்னன்ன?
மனைவி : வேணுமா? வேண்டாமா?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
No comments:
Post a Comment