Monday, 23 July 2018

அலுவலக ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

டிரைவர் : சாரி சார். பெட்ரோல் காலி இனி வண்டி ஒரு அடி கூட முன்னாடி நகராது.

மேனேஜர் : சரி ரிவர்ஸ் எடுப்பா நாம வீட்டுக்கு போகலாம்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

முதலாளி : வீட்டுக்கு வாங்கின கடனையே இன்னும் திருப்பி தரல்ல, அதுக்குள்ள கார் வாங்கணும்னு லோன் கேக்க வந்துட்டியா?

தொழிலாளி : வீட்டுக்கு வாங்கின கடனை கேட்டு ‌தினமு‌ம் வீட்டுக்கு வந்து நச்சரிக்கிறாங்க, அவங்களுக்கு ‌சீ‌க்‌கிரமா ‌கிள‌ம்‌பி ஓட வே‌ண்டியதா இரு‌க்கு. அதான் கார் இருந்துச்சுன்னா சௌரியமா இருக்குமேன்னு லோன் கேக்கறேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

முதலாளி 1: எங்க ஆபீஸ்ல பிரச்சனை ஏற்பட்டா ஒரு குரூப் பிரச்சினையை அலசும், இன்னொரு குரூப் தீர்வுகள அலசும், இன்னொரு குரூப் செஞ்சு முடிச்சுடும்.

முதலாளி 2:அப்படி என்ன பிரச்சினையை தீர்த்திங்க சமீபமா?

முதலாளி 1: ஒரு டேபிளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாத்தினோம்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மேனேஜர் : ஆபிஸ்ல தூங்கினா இப்பல்லாம் டிஸ்மிஸ் செய்யலாம்னு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியிருக்கு தெரியுமா?

கிளார்க் : அதச் சொல்றதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் இல்லை, 10 நிமிஷத்துக்கு முன்னாடியே உங்கள டிஸ்மிஸ் செஞ்சு ஆர்டர் வந்தாச்சு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

முதலாளி: நான் ஆஸ்பத்திரில இருந்தபோது நான் செய்ய வேண்டிய வேலை எல்லாம் யா‌ர் யா‌ர் செ‌ஞ்சா‌ங்க?

வேலைக்காரன்: சின்னய்யா ஃபைல்ல கையெழுத்து போட்டாரு, அம்மா தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சினாங்க...

முதலாளி: நீ என்ன பண்ணின?

வேலைக்காரன்: நான் வேலைக்காரி லலித்தாவ கவனிச்சுக்கிட்டேன்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மேனேஜர்: மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?

க்ளார்க்: நிச்சயமா இ‌ல்லை‌ங்க சா‌ர் ஏ‌ன் கே‌க்கு‌றீ‌ங்க?

மேனேஜர்: நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்கு போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மேனேஜ‌ர்: நேத்திக்கு உட‌ம்பு ச‌ரி‌யி‌ல்ல‌ன்னு ‌அலுவலக‌த்‌து‌க்கு ‌விடுமுறை போட்டுருக்க ஆனா நீ நே‌த்து கிரிக்கெட் போ‌ட்டில 35 ரன் அடிச்சதா உன் பிரண்ட் சொல்றான்... இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல ஆமாம்...

ஊ‌ழிய‌ர்: சார் என‌க்கு ‌நிஜமாகவே உட‌ம்பு ச‌‌ரி‌யி‌ல்ல. அதனா‌லதா‌ன் ‌கி‌ரி‌க்கெ‌ட்ல 35 ரன் அடிச்சேன் இல்லாட்டி செஞ்சுரி போட்டிருப்பேன் சா‌ர்.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மேனேஜர்: எல்லா அலுவலகக் கதவுலேயும் தள்ளு-னு போட்டிருக்கும். இந்த அலுவலகக் கதவுலே தள்ளாதீர்கள்-னு போட்டிருக்கே ஏன்?

முதலாளி: இது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

முதலாளி: ஸ்டெனோ வேலைக்கு அப்ளிகேஷன் போட்ட எத்தனையோ பேர்ல உன்னை மட்டும் நான் செலக்ட் பண்ணிய காரணம் என்ன தெரியுமா?

தொழிலாளி: சொல்லுங்க டார்லிங்!

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

மேனேஜர்: 5-ம் வார்டு பேஷண்ட் பீஸ் செட்டில் பண்ணாம ஓடிட்டாரு.

டாக்டர்: அப்படியா? அங்கே டூட்டி பார்த்த நர்ஸை கூப்பிடுங்க.

மேனேஜர்: அந்த நர்ஸோடதான் ஒடிப்போய்ட்டாரு.

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

No comments:

Post a Comment