😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : அந்த கஸ்டமர் ஏதோ கேட்டதும் சர்வர் இவ்வளவு டென்ஷன் ஆகிட்டாரே. அவர் அப்படி என்னதான் கேட்டார்?
மற்றவர் : சாப்பிட தனக்கு மாட்டுப் பொங்கல்தான் வேணும்னு கேட்டிருக்கார்..!
ஒருவர் : ??????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சர்வர் 1 : என் டேபிளுக்கு வந்தவன் மகா கஞ்சனாக இருப்பான் போலிருக்கு?
சர்வர் 2 : எப்படி சொல்ற?
சர்வர் 1 : தட்டில் டிப்ஸ் பணத்திற்கு பதிலாக பாதி இட்லிய வச்சுட்டு டிப்ஸா வச்சுக்கன்னு சொல்லிட்டு போறான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சர்வர் : நீங்க ஆர்டர் பண்ண பிசாவை, எவ்ளோ துண்டாக்கி வரவேண்டும்! 8டா? 12டா?
நம்மாளு : 8 துண்டாக்கிடுங்க, என்னால 12 சாப்பிட முடியாது.
சர்வர்: ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வந்தவர்: என்னப்பா சர்வர் இன்னிக்கி என்ன ஸ்பெஷல்
சர்வர்: கொஞ்சம் இருங்க சார் கேட்டு சொல்றேன்
வந்தவர்: என்ன கேக்கப் போறேப்பா?
சர்வர்: ஒண்ணும் இல்லை எந்த ஐட்டம் மீந்திருக்குன்னு கேக்கப் போறேன். அதை வச்சுத்தான் ஸ்பெஷல் தயார் பண்ணுவாங்க!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ரமனன்: சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா?
சர்வர்: ஏன் அக்கறையா கேட்கறீங்க?
ரமனன்: எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஹோட்டலுக்கு வந்தவர்: மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது.. இன்னும் வரலையே?
சர்வர்: மதுரை என்ன பக்கத்துலய இருக்கு. உடனே கொண்டு வர..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சர்வர் 1: நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்!
சர்வர் 2: எப்படி?
சர்வர் 1: நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : காஞ்சிபுரம் இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது...... இன்னும் வரலையே......
மற்றவர் : காஞ்சிபுரம் என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கொண்டு வர.
ஒருவர் : 😀😀
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாடிக்கையாளர்: சர்வர்......... எல்லா டேபிள்லயும் ஒரு அயர்ன்பாக்ஸ் இருக்கே எதுக்கு ?
சர்வர்: தோசை சூடு பத்தலைன்னா அயர்ன் பண்ணிக்கலாம்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாடிக்கையாளர்: காஞ்சீபுரம் இட்லி கேட்டால் இதைக் கொண்டு வரியே?
சர்வர்: என் காதுலே காய்ஞ்சு போன இட்லின்னு கேட்டுது சார்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சாப்பிட வந்தவர்: நீங்க கொடுத்த சிக்கன் சூப் வேடிக்கையா இருக்கு
சர்வர்: அப்ப சிரிச்சீங்களா இல்லையா.
சாப்பிட வந்தவர்: ஆமாம் ஏன் கேக்குற?
சர்வர்: இல்ல அதுக்கும் சேர்த்து பில் போடணும் இல்லையா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
சர்வர்: என்னப்பா வெய்ட்டர், ஐஸ்கிரீம் கப்ல காக்கா எல்லாம் எச்சம் போய் இருக்கு பார். நல்ல கப்பா கொண்டு வந்து வைக்கக் கூடாதா?
சாப்பிட வந்தவர்: அட நீங்க வேற சார்.. அதுதான் ஐஸ்கிரீம். இங்கல்லாம் அவ்வளவுதான் சார் வரும்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
முதலாளி: என்னப்பா இட்லி, தோசை மேலல்லாம் இவ்வளவு கொசு
சர்வர்: இப்பல்லாம் ஈக்கு கூட நம்ம கடை டிஃபன் பிடிக்கறதில்ல சார்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அருண்: என் பையனுக்கு பிறந்தநாள், வெயிட்டர்...... மைசூர்பாகு இருந்தா 4, 5 கிலோ பார்சல் பண்ணு
சர்வர்: பையனுக்கு எத்தனையாவது பர்த்-டே?
அருண்: 2-வது பர்த்டே
சர்வர்: எங்க மைசூர்பாகுக்கும் இது 2-வது வருஷம் சார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment