ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : பாபு, எங்கிருந்து எதுவரை முகலாயர்கள் ஆண்டார்கள்?
பாபு: 16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் ஆசிரியர் !
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : இந்தக் கணக்கை முட்டாள் கூட ஈஸியா செய்திடுவான்.
மாணவன் : அது தான் சார் நீங்க ஈஸியா பண்ணிடீங்க!
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஒரு மனிதன் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
மாணவன் : அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாணவன் : கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்திய தலைநகரமா மாத்திரு.
ஆசிரியர் : ஏன்டா அப்படி வேண்டுறே?
மாணவன் : ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன் அதான் ?
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உனக்கு தமிழ் டீச்சரை பிடிக்குமா... இங்கிலீஷ் டீச்சரை பிடிக்குமா ?
மாணவன் : எனக்கு வீட்டுக்கு போற பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் பிடிக்கும் !
ஆசிரியர் : ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : 10ஆம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது ?
மாணவி : அப்பவும் உலகம் உருண்டையாதான் இருந்தது ஆசிரியர் !
ஆசிரியர் : ???????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏண்டா Home Work பண்ணல..?
மாணவன் : சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: பசங்களா! நாம உயிர் வாழறதுக்கு ரொம்பத் தேவையான ஆக்ஸிஜனை 1773-ல தான் கண்டுபிடிச்சாங்க.
மாணவன்: நல்லவேளை ஆசிரியர் ! நான் அதுக்கப்புறம் பிறந்தேன். முன்னாடி பிறந்திருந்தா ஆக்ஸிஜன் இல்லாம செத்துப் போயிருப்பேன்.
ஆசிரியர்: ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?
மாணவன்: சார்.. அது வாயில்லா பிராணி சார்!
ஆசிரியர்: ??????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால் என்னவாயிருக்கும்?
மாணவன் : வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பாரு!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: தானத்தில் பெரிய தானம் எதுடா ?
மாணவன்: மைதானம் சார் !
ஆசிரியர்: ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது, பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
ஆசிரியர்: ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாத்தியார் : ஏண்டா முழிக்கிற இந்த கேள்விக்கு முட்டா பய கூட பதில் சொல்லிருவாண்டா ?
மாணவன் : அதான் சார் நா பதில் சொல்லல.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாணவி 1: நீ ஒரு லூசுடி
மாணவி 2: நீ தாண்டி லூசு
ஆசிரியர் : அங்க என்னங்கடி சத்தம் இங்க நா ஒருத்தி இருக்கறது உங்க கண்ணுக்கு தெரியலையா
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: இந்த Period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா?
ஆசிரியர்: ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவன்: நீங்கதான சார், நேற்று சொன்னீங்க துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?
மாணவன்: அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : இரண்டாம் உலகப்போர் தோன்ற என்ன காரணம் சொல்லு?
மாணவன் : முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி அடுத்த தடவை இன்னும் நல்லா போரை நடத்தணும்னு முடிவு
ஆசிரியர் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
மாணவன்: எங்க அப்பா, அம்மா சண்ட போடும் போது பார்க்கலாம் சார்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப் படாதீங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: 1869-ல் என்ன நடந்தது?
மாணவன்: எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873-ல் என்ன நடந்தது?
மாணவன்: காந்திஜிக்கு நாலு வயசு சார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: என்னப்பா... எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?
மாணவன்: கொஸ்டீன் பேப்பர் லீக் ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன் ?
மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார் !
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தேர்வின் கடைசி 30 நிமிடங்களுக்கு முன்னால்..
ஆசிரியர்: மாணவர்கள் listen 30 mints more...
நண்பன் 1: வா மச்சான் கிளம்பலாம்..
நண்பன் 2: இரு மச்சான்.. 30 நிமிசத்துல மோர் கொடுபாங்களாம் குடிச்சிட்டு போகலாம்..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?
மாணவன்: எனக்கு அப்பவாக இருக்குறார் ஆசிரியர் .
ஆசிரியர் : ??????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: அமெரிக்கா எங்கே உள்ளது.
மாணவன்: தெரியாது சார்.
ஆசிரியர்: பென்ஜின் மேல் ஏறி நில்லுடா.
மாணவன்: ஏறி நின்னா தெரியுமா சார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
மாணவன்: தூங்க வைக்கிறது நீங்க, எழுப்புறது நானா? என்ன கொடுமை சார் இது?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : கணக்குப் பரீட்சைல எல்லாக் கேள்விக்கும் ஏணிப்படியை வரைஞ்சு வச்சிருக்கியே, ஏண்டா?
மாணவன் : கணக்குல ஸ்டெப்புக்குத்தான் மார்க்குன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!
ஆசிரியர் : ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படுவீக்கா இருக்கான் சார்.
தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான், ஐயா...?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : அக்கால ஆட்சி முறைக்கும், இக்கால ஆட்சி முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மாணவி : அக்கால ஆட்சிமுறை கல்வெட்டு ஆட்சி. இக்கால ஆட்சிமுறை கட் - அவுட் ஆட்சி.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏசு, கிருஷ்ணர், காந்தி அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?
மாணவன் : மூவரும் அரசு விடுமுறை அன்று பிறந்தவர்கள்..
ஆசிரியர் : ???????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாத்தியார் : தென்னைமரத்தில இருந்து 6 இலையும், பனைமரத்தில இருந்து 6 இலையும் கீழே விழுது ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?
மாணவன் : குப்பை தான் சார் வரும்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : இரண்டாம் புலிகேசி எப்போது முடிசூட்டிக் கொண்டார்..?
மாணவன் : முதலாம் புலிகேசி இறந்த பிறகு சார்..!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் 1 : எதுக்கு பசங்க எல்லோரையும் வாசல்ல உக்காரவச்சு பரீட்சை எழுத வச்சிருகாங்க?
ஆசிரியர் 2 : எண்ட்ரன்ஸ் எக்ஸாமாம் சார்?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : கண்டெக்டரிடம் ஒரு ரூபாய் கொடுத்து 90 பைசாவிற்கு டிக்கெட் வாங்கினா மீதி உனக்கு எவ்வளவு தருவாரு?
மாணவன் : சில்லரை இல்லைனு சொல்லிடுவாறு ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு?
மாணவன் : எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : பள்ளிக்கூடத்திற்கு கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன் : அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....
மாணவன் : அதனால தான் படிக்கவே வெறுப்பா இருக்கு சார்...!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : கணக்கு பரீட்சை எழுதசொன்ன ஏண்டா டான்ஸ் ஆடுறாய்?
மாணவன் : ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மார்க் உண்டுன்னு நீங்கதானே சொன்னிங்க சார்.. அதான் ஆடுறேன் ..
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏன்? என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கிட்டு வந்து வச்சிருக்க?
மாணவன் : நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
ஆசிரியர் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏம்மா! பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வர்றது?
மாணவி : நீங்கதான ஆசிரியர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லிகிட்டே இருந்தீங்க ...
ஆசிரியர் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தலைமை ஆசிரியர் : ஏன்டா தமிழ் ஆசிரியர் காலை புடிச்சி வாரி விட்டிங்க ?
மாணவன் : அவர் தான் "காலை வாருங்கள்"னு சொன்னார்...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : வளவளவெனப் பேசி கழுத்தறுப்பவர்களை என்னவென்று சொல்வார்கள் ?
மாணவர்கள் : (கோரஸாக) வாத்தியார்னு சொல்வோம் !!
ஆசிரியர் : ??????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வோர்க் பண்ணலே ?
கோபு: சார் நான் ஹாஸ்டல்ல தான தங்கி இருக்கேன்.
ஆசிரியர் : ???????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : நேத்திக்கு எதுவரைக்கும் பாடம் நடத்தினேன் சொல்லுங்க ?
மாணவன் : பெல் அடிக்கிற வரைக்கும் ஆசிரியர் ...
ஆசிரியர் : ?????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற ?
மாணவன் : என் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே ஆசிரியர் சொன்னீங்க ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏண்டா லேட் ?
மாணவன் : சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன் !
ஆசிரியர் : ராஸ்கல் ! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம் ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு. ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ?
மாணவன் : எல்லா படிக்கட்டையும் தான் ஏறணும் சார்!
ஆசிரியர் : ???????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உன்கிட்ட நாய் பத்தி ட்டுரை எழுதிட்டு வரச்சொன்ன உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?
ஜானி : ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் ஆசிரியர் அதான்.
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : வீட்டுப்பாடம் ஏன் எழுதலைன்னு கேட்டதுக்கு எதிர்த்துப் பேசறியே... ஏன்?
மாணவன் : நீங்கதானே சார் சொன்னீங்க, எந்த ஒரு பிரச்சனைன்னாலும் சோர்ந்து போயிடாம எதிர்த்துப் போராடணும்னு!
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உங்கப்பா என்ன வேலை பார்க்கறாரு.
பையன் : எங்கம்மா சொல்ற எல்லா வேலையையும் பாப்பாரு ஆசிரியர் .
ஆசிரியர் : ?????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : நான் ஒன்னு சொல்லுவேன் எழுந்திருச்சு ஓடக்கூடாது.
மாணவர்கள் : ஓகே சொல்லுங்க?
ஆசிரியர் : பக்கத்து பெருமாள் கோவில்ல சுண்டல் போடுறாங்க.
மாணவர்கள் : ஹே... ஹே... ஓடுங்க?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : பாபு கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?
பாபு : இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.
ஆசிரியர் : உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?
பாபு : நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
மாணவன் : நீங்க தானே சார் பிரச்சனைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
ஆசிரியர் : ????????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாத்தியார் : போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா.
மாணவர்கள் : சார், தமிழ்நாடு பூரா கேட்டுட்டேன். சிட்டி பஸ் இருக்குன்றான், ஏர்பஸ் இருக்குன்றான், எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான், ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.
வாத்தியார் : ??????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: டேய் நான் இங்க நாய் மாதிரி கத்திட்டிருக்கேன். அங்க லாஸ்ட் பென்ச்ல எங்கடா ஒருத்தனை காணோம்.
மாணவன் : உங்களுக்குப் பிஸ்கட் வாங்கிட்டு வரப் போயிருக்கான் மிஸ்...
ஆசிரியர் : ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியே போயிட்டு வந்தாலும் தொண தொணனு சத்தம் போடுவீங்க.. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே.
மாணவன் : நீங்க வெளியே போயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே. மறந்துட்டீங்களா சார்?
ஆசிரியர் : ???????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாத்தியார் : இனிமே சிகரெட் குடிச்சுட்டு யாரும் கிளாசுக்கு வரக்கூடாது.
மாணவன் : அப்ப கிளாசுக்கு வந்துட்டு சிகரெட் குடிக்கலாமா சார்?
வாத்தியார் : ???????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : சூரியன் மேற்கே மறையும். இது இறந்த காலமா? எதிர்காலமா?
மாணவன் : அய்யோ சார். சூரியன் மறைஞ்சா அது சாயங்காலம் சார்...
ஆசிரியர் : ???????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உன் பேர் என்ன?
மாணவி : பொன்னி மிஸ்.
ஆசிரியர் : ஸ்வீட் நேம்.
மாணவி : ஸ்வீட் நேம் இல்ல மிஸ், ரைஸ் நேம்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : பசங்களா கேளுங்க எந்த உணவையுமே காச்சி சூடா வெச்சாத்தான் பாக்டீரியா தங்காது.
மாணவர்கள் : போங்க ஆசிரியர் அப்படி பார்த்த பூமியே பயங்கர சூடா தானா இருக்கு, எல்லா பாக்டீரியாவும் செத்து இருக்கனும்ல.
ஆசிரியர் : ??????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ரேடியோவை கண்டுபிடிச்சவர் MARCONI
மாணவன் : எங்கள் வீட்டிலையும் ஒரு ரேடியோ காணாமல் போச்சு சார். அவர் வந்து கண்டுபிடிச்சு கொடுப்பாரா?
ஆசிரியர் : ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : பாடம் எல்லாம் முடிஞ்சிப் போச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..
மாணவன் : சார் உங்க பொண்ணு பேரு என்ன சார்.
ஆசிரியர் : ????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : நிலநடுக்கம் எப்ப வரும்?
மாணவன் : பூமிக்குக் குளுரும் போது வரும் ஆசிரியர்
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாணவி : சீதா பேனாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க ஆசிரியர் !
ஆசிரியர் : இராவணன் தான் தூக்கிட்டுப் போயிருப்பான்! அவன் ஏற்கனவே சீதாவைத் தூக்கிட்டுப் போன களவாணி!
மாணவி : ????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : என்னடா ஓட்டப் பந்தயத்துக்கு வரும்போது கையில தீப்பந்தத்தோட வந்திருக்க?
மாணவன் : நீங்க தானே சார் சொன்னீங்க.. ஜெயிக்கணும்னா ஒரு பயர் வேணும்னு அதான் சார் கொண்டு வந்தேன்.
ஆசிரியர் : ???????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு...
மாணவன் : தெரியலை சார்.!
ஆசிரியர் : இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற! உன் பேரு என்னடா?
மாணவன் : என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!
ஆசிரியர் : ??????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள்!
மாணவன் : சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...!
ஆசிரியர் : ???
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
மாணவன் : ஐயோ Question இவ்வளவு கஷ்டமா இருக்கே ?
ஆசிரியர் : எரும அது ஹால் டிக்கெட் ! இந்தா Question Paper பிடி !
மாணவன் : ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : எல்லா பணத்திலேயும் காந்தி ஏன் சிரிச்சுட்டே இருக்காரு?
மாணவன் : அழுதா பணமெல்லாம் நனைஞ்சு போயிடும் அதனாலதான்!
ஆசிரியர் : ????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ராமு, உன்னை வைரஸ் கிருமியோட படத்தை வரைஞ்சிட்டு வரச் சொன்னேனே, ஏன் நோட்ல வரைஞ்சிகிட்டு வல்ல...?
மாணவன் : ஆசிரியர் , நான் வரைஞ்சிருக்கேன். ஆனா, நீங்க மைக்ராஸ்கோப்புல பாத்தாதான் அது தெரியும்.
ஆசிரியர் : ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏண்டா ராமு! பாம்புன்னு எழுதச்சொன்னா பம்புன்னு எழுதியிருக்கயே?
ராமு : நீங்கதானே ஆசிரியர் பாம்புக்குக் கால் கிடையாதுன்னு சொன்னீங்க!
ஆசிரியர் : ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஏசுபிரான் ஏன் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்.
மாணவன் : ஏன்னா அந்த காலத்தில் எல்லாம் காலிங் பெல் கிடையாது. அதனாலதான் சார்
ஆசிரியர் : ????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: முட்டை போடுற நாலு ஜீவிகள் பேரு சொல்லு ?
மாணவன்: அறிவியல் ஆசிரியர் கணக்கு ஆசிரியர் ஆங்கில ஆசிரியர் வரலாறு ஆசிரியர் .
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: 100 + 100 = 200 அப்படினா, 500 + 500 எவ்வளவு?
மாணவன்: ஆமா சார், எப்ப பார்த்தாலும் சின்ன கணக்க நீங்க போட்டுட்டு, பெரிய கணக்க, எங்கிட்ட கேளுங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: ஏண்டா திரு-திருன்னு முழிக்கறே?
மாணவன்: பின்னே, திருமதி திருமதின்னா சார் முழிக்க முடியும்?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
மாணவன்: அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : இந்த உலகத்தை முதலில் சுத்தி வந்தது யார் ?
மாணவன் : அத விடுங்க சார் ஊர் சுத்துன வெட்டி பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
வாத்தியார்: ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை?
மாணவன்: ஊறுகாய் சார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு ழ வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?
அம்மா : நீங்க எவ்வளவு அடிச்சும் வராத ழ அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உனக்கு பிடித்த விலங்கு எது?
ஹரி: பூனை ஆசிரியர்
ஆசிரியர் : ஏன்?
ஹரி: பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
மாணவன்: 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
மாணவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்: ஏன் ஆசிரியர் இந்தியா என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்: ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தமிழ் ஆசிரியர் : அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியாக மாற்றுங்கள் பார்ப்போம்..
மாணவன்: டேய் மச்சான், figure டா!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்:இது யாரோட கையெழுத்து?
பையன்:என் அப்பாவோட கையெழுத்து ?
ஆசிரியர் :உன் அப்பா பெயர் என்ன ?
பையன் :ஏழுமலை..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு... அவரு நாலு பிச்சைகாரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா?? தப்பா...??
மாணவன் : சரி தான் ஆசிரியர் ...
ஆசிரியர் : எப்படி ??
மாணவன் : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல... ஆசிரியர் ...
ஆசிரியர் : ??
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: கட்டபொம்மனை எங்க தூக்குல போட்டாங்க?
பையன்: கழுத்துல சார்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Teacher: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
Student: மணலுக்கு சொரிஞ்சு விட்டு nycil powder போடா வேண்டும் .
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Teacher : முதல் மாசம் january ! ரெண்டாவது மாசம் Febuary! பத்தாவது மாசம் என்ன ?
Student: Delivary Teacher.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: பாட்டி.. நீ செத்துட்டதா சொல்லி உன் பேரன் லீவ் சொன்னான். நீ இருக்க..!
பாட்டி: எங்கிட்ட நீங்க செத்ததால ஸ்கூல் லீவு என்று சொன்னானே.!
ஆசிரியர்: ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: எதுக்குடா வகுப்புக்கு கழுதையை ஓட்டிட்டு வந்திருக்க?
மாணவன்: உங்களுக்கு எல்லாம் பாடம் நடத்தறதை விட ஒரு கழுதைக்கு பாடம் நடத்தலாம்-னு சொன்னீங்களே சார்.. அதான் .
ஆசிரியர்: ???????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டரா இருக்கான், சுமரா படிச்சவன் பஸ் கண்டக்டரா இருக்கான், இதுல இருந்து என்னத்தெரியுது.
மாணவன்: ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையில இருக்காங்க-னு தெரியுது.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: கிளாஸ்ல ஃப்ஸ்ட் உங்க மகன் தாங்க!
மகனின் அம்மா: அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்!
ஆசிரியர்: நீங்க வேற.. பெல் அடிச்சதும் அவன்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : உங்க பையன் பெரிய மிலிட்டரி மேனா வருவான்
அம்மா: எப்படிச் சொல்றீங்க.
ஆசிரியர் : எல்லா சப்ஜக்ட்லயும் பார்டர்லயே பாஸ் பண்றான்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: ஏன்டா 20 நாள் காலேஜ்-க்கு வரல?
மாணவன்: சார்.. எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர் : டேய், ஏண்டா தரைல உக்காந்து கணக்கு போட்டுகிட்டு இருக்குற?
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு!.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஆசிரியர்: கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்.?
மாணவர்: சொரிஞ்சு விடணும் ஆசிரியர்..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment