😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீதிபதி : இந்த கொள்ளையை நீ மட்டும் தனியாகவா நடத்தின?
குற்றவாளி : பின்ன என்ன எஜமான் ஊர் பூரா தம்பட்டம் போட்டு கூட்டு சேர்ந்து செய்ற காரியமா இது.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீதிபதி: நீ அவன் வயிற்றில் எட்டி உதைத்ததால் அவன் இறந்துவிட்டான். நீ ஏன் அவன் வயிற்றில் மிதித்தாய்?
குற்றவாளி: நான் உதைக்க நினைத்தது என்னவோ அவன் பின்னாடிதான். ஆனா எனக்கு எப்படி தெரியும். நான் அவனை பின்னால் உதைக்க வரும்போது அவன் திரும்பி கொள்வான்னு?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீதிபதி: உன் மேல 3 வழக்கு பதிவாகியிருக்கு, எப்படியும் 4 வருஷம் தண்டனை கிடைக்கும். இதுக்கு நீ என்ன சொல்லப்போற?
குற்றவாளி: ஐயா, இது ஆடிமாசம், ஆடித்தள்ளுபடியெல்லாம் கிடையாதா சார்?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஜட்ஜ்: ஏம்பா நீ ஆறு வருஷமா உன் பொண்டாட்டிய அடிமையா நடத்தி இருக்கே! அது உண்மையா?
கைதி: என்னை மன்னிச்சுடுங்க எஜமான்
ஜட்ஜ்: அந்த பேச்செல்லாம் இங்க வேண்டாம்.. உன்னாலே இத எப்படி சாதிக்க முடிஞ்சுதுன்னு சொல்லிட்டு போய்கிட்டே இரு..!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment