😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் : பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா, மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர், என்ன செய்யறது?
டாக்டர் : ஆபத்துக்குப் பாவமில்லை.. என் கால் சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு!
நர்ஸ் : ????????????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நோயாளியின் உறவினர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ்: நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்...
டாக்டர்: எப்படி சொல்றீங்க?
நர்ஸ்: உங்களுக்கு ஏதாவது ஆப்ரேஷன்னா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் 1: இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
நர்ஸ் 2: அப்படியா! எப்படி..!
நர்ஸ் 1: இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் 1: நம்ம டாக்டரோட ஞாபகமறதி நோய் குணமான சேதி கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க!
நர்ஸ் 2: எதுக்கு?
நர்ஸ் 1: அவர் நிஜமாவே டாக்டர் இல்லையாம், வக்கீலாம்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் 1: டாக்டர் ஏன் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை தேடி பதட்டமா அலையறாரு?
நர்ஸ் 2: ரீசன் ஃபார் டெத்ங்கற இடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.
நர்ஸ் 1: ?????
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: ஏம்மா, அந்த பேசன்ட் பெயர் என்ன..?
நர்ஸ்: வாழவந்தான் சார்..?
டாக்டர்: அப்பறம், ஏம்மா அவன் இங்க வந்தான்..?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் : மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர் !
டாக்டர் : எப்படி சொல்ற ?
நர்ஸ் : சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே ?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ஒருவர் : சின்ன ஆப்ரேசன் தான் பயப்பாடதீங்கனு நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க ?
மற்றொருவர் : பரவாயில்லையே...
ஒருவர் : ஆறுதல் சொன்னது எனக்கு இல்லை ஆப்ரேசன் பண்ணப் போற டாக்டருக்கு...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் 1 : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்-ன்னு நினைக்கிறேன்.
நர்ஸ் 2 : எப்படிச் சொல்றே?
நர்ஸ் 1 : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் 1 : ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?
நர்ஸ் 2 : கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம். அதான்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
செவிலியர் 1: நம்ம டாக்டருக்கு ராசிபலன்ல ஏகப்பட்ட நம்பிக்கை அதுக்காக இப்படியா ரிப்போர்ட் எழுதி கொடுப்பாரு?
செவிலியர் 2: ஏன் ராசிபலன் நம்பிக்கைக்கும், ரிப்போர்ட்டுக்கும் என்ன தொடர்பு?
செவிலியர் 1: பேஷண்டுக்கு கேன்சர் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலான இவருக்கு கடகம்னு ரிப்போர்ட்ல எழுதறாரு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் : என்ன டாக்டர் அந்த அம்மாவுக்கு பேரன் பேத்தியெல்லாம் இருக்குது... அவங்க கர்பமா இருக்கறதா சொல்றீங்க?
டாக்டர் : அதவிடுங்க அவங்க விக்கல் நின்னுச்சா இல்லையா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: நர்ஸ் ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா?
நர்ஸ்: எல்லாமே ரெடி சார், பேஷண்ட் யாராவது இருந்தா ஆரம்பிச்சுடலாம்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நோயாளி : என்ன சார் இன்டர்வியூவுக்கு வந்தா எல்லாருக்கும் கண்ணுல சொட்டு மருந்து ஊத்தறாங்க?
நர்ஸ்: ஹலோ! இது இன்டர்வியூ இல்ல! வரிசையா எல்லாம் உக்காந்திருந்தா அது கம்பெனி இன்டர்வியூன்னு நெனச்சு வந்து உட்கார்ந்துக்கறதா? இது கண் ஆஸ்பத்திரி!.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
டாக்டர்: அந்த 25 ம் நம்பர் பெட்ல இருந்தவருக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்குன்னு ஏன் எங்கிட்ட யாரும் செல்லல?
நர்ஸ்: ஏன் டாக்டர்? என்னாச்சு?
டாக்டர்: ஆஸ்பத்திரி பில் செட்டில் பண்ணாம நேத்து ராத்திரி நடந்து போயிட்டார் தெரியுமா?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ்: என்ன டாக்டர் உங்க ஆபரேஷன் தியேட்டர்ல யார் யாரோ ஃபோட்டோவையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?
டாக்டர்: என்னை நம்பி தைரியமா எங்கிட்ட ஆபரேஷன் பண்ணிட்டு இறந்து போனவங்க ஃபோட்டோதான் அதெல்லாம்!
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ்: டாக்டர், 27ம் நம்பர் பேஷண்ட் ஏதோ வீடு கட்டிக்கிட்டு இருக்காறாம்...... அதனால் எப்ப டிஸ்சார்ஜ் பண்ணப்போறீங்கன்னு கேக்கறார்!
டாக்டர் : அவரை வெளியே டிஸ்சார்ஜ் பண்ணிட்டா அப்புறம் என் வீட்டை நான் எப்ப கட்டி முடிக்கறது?
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் 1: டாக்டர் கடமை உணர்வு தவறாதவர்!
நர்ஸ் 2: எப்படி சொல்ற?
நர்ஸ் 1: பேஷண்ட் செத்தாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத்தான் நிறுத்துவார்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ் 1: ஆபரேஷன் தியேட்டருக்கு டெலிஃபோன கொண்டு போகாதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா?
நர்ஸ் 2: ஏன் என்னாச்சு?
நர்ஸ் 1: அதுவும் டெட் ஆயிடுச்சு.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ்: இன்னும் ஒரு மணி நேரத்துல டாக்டர் உங்களுக்கு ஆபரேஷன் பண்ணப்போறார்.
நோயாளி: சரிங்க நர்ஸ்..
நர்ஸ்: ஏதாவது சாப்பிடலாங்களா?
நோயாளி: இல்லை
நர்ஸ்: கடைசியா ஒரு முறை என்ன வேணாலும் சாப்பிட்டுக்குங்க.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நர்ஸ்: டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல டாக்டர்..
டாக்டர்: சரி சரி கவலைப்படாத புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment